பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 - மாயா விநோதப் பரதேசி ஆண்டு வருந்தியது ஆதலால், அவர் அப்படியே சிறிது கேரம் தமது ஆசனத்தில் இருந்தபடி ஆழ்ந்து சிந்தனை செய்தார். அவரது தேகம் பதறிக் கொண்டிருந்தது. மனம் இன்னதென்று விவரிக்க இயலாத பெருத்த சஞ்சலத்தினால் உலப்பப்பட்டபடி இருந்தது. தாம் எவ்விதமான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அவர் ஒருவித முடிவிற்கு வந்தவராய், மறுபடி டெலிபோனண்டை போய், அதைத் தமது பங்களாவில் இருந்த டெலிபோனோடு சேர்க்கச் செய்து, அவ்விடத்தில் இருந்த மனோன்மணியம்மாளை அழைத்து, சற்று நேரத்திற்கு முன் போலீஸ் ஜெவான் தமக்குத் தெரிவித்த விபரீதச் செய்தியை அவளிடம் கூறியதன்றி, தாம் உடனே போலீஸ் கமிஷனரிடம் போய் அன்றைய மாலையில் இருந்து இரவு முழுதும் தமது பங்க ளவைப் பாதுகாப்பதற்கு ஏராளமான ஜெவான்களை அனுப்பச் செய்து விட்டு, நேராக கோமளேசுவரன் பேட்டைக்குப்போய், வேலாயுதம் பிள்ளை முதலியோரை அழைத்துக் கொண்டு வரத் தீர்மானித்திருப்பதாகவும் கூறி முடித்த பின், தமது கச்சேரியை விட்டுப் புறப்பட்டு நேராக போலீஸ் கமிஷனரது கச்சேரியை நோக்கிப் போய்விட்டார். தனது தந்தை தெரிவித்த செய்தியைக் கேட்டவுடன் மனோன் மணியம்மாள் திடுக்கிட்டு மிகுந்த கிலியும் குழப்பமும் அடைந்து விட்டாள். கொடிமுல்லையம்மாளும் கோபாலசாமியும் வந்திருந்த அன்றைய தினம் இரவில் பல முரட்டு மனிதர்கள் தங்களது பங்களாவில் நுழைந்து வேலைக்காரர்களையும் டலாயத்து களையும் அடித்து அட்டுழியம் செய்து விட்டுப் போனது அவளது மனதில் நன்றாகப் பதிந்து அப்போதே நடப்பது போல இருந்தமையால், மறுபடியும் அவர்கள் வந்து தங்களுக்கு எவ்வித மான பொல்லாங்கை இழைப்பார்களோ என்ற திகிலும் நடுக்கமும் உண்டாகி விட்டன. அதனால் ஏற்பட்ட கலக்கத்தைக் காட்டிலும், வேலாயுதம் பிள்ளை முதலியோர் தமது பங்களாவிற்கே வந்து விடப் போகிறார்களே என்ற பயமும், அவர்கள் தனது நடையுடை பாவனைகளில் எவ்விதமான குற்றங்களைக் கண்டு தன்னை துஷிப்பார்களோ என்ற கவலையும் நூறு மடங்கு அதிகமாக எழுந்து அவளை வதைக்கத் தொடங்கின. முன் தடவையில்