பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 33 எதிரிகளைச் சேர்ந்த முரட்டு மனிதர்கள் நடு இரவில் திடீரென்று வந்தமையால், தாங்கள் அஜாக்கிரதையாக இருக்க நேர்ந்து விட்ட தென்றும், இன்றைய தினம் முன்னாக எச்சரிக்கப் பட்டிருப்பதால், தனது தந்தை தக்க போலீஸ் பந்தோபஸ்துடன் வருவார் ஆதலால், அந்த முரடர்களால் தங்களுக்கு இரண்டாவது தடவை எவ்விதக் கெடுதலும் நேராதென்றும் அவள் சிறிது நேரத்தில் யூகித்துக் கொண்டாள். ஆகவே, அவளது கவலையும், கவனமும் முக்கியமாக வேலாயுதம் பிள்ளை முதலியோரது வருகையைப் பற்றியதாகவே இருந்தன. தனக்குக் கலியாணமான பிறகு வேலாயுதம் பிள்ளை விட்டார் தன்னை அன்பாகவும் மரியாதை யாகவும் நடத்துவார்கள் என்று தனது தந்தை முதல் நாள் காலையில் தனக்கு உறுதி கூறினார் ஆனாலும், அவளது மனம் சமாதானம் அடையாமல், இரண்டு தினங்களாய்த் தாமரை இலை நீர்த்துளி போலத் தத்தளித்துக் கொண்டே இருந்தது. தான் எப்படியாவது முயன்று அந்தக கலியாணம் நடவாவிதம் தடுத்து விட வேண்டும் என்ற எண்ணமே அவளது மனத்தில் அடிக்கடி தோன்றி உறுதிப்பட்டு வந்தது. தனது தந்தை தன்மீது கோபங் கொள்ளாதபடி நயமாக அவரைத் தனது வழிக்குத் திருப்புவதற்கு தான் எவ்வித தந்திரம் செய்யலாம் என்று சிந்தித்த வண்ணமாய் இருந்தாள் வெள்ளிக்கிழமையாகிய அன்றைய தினம் தனக்கு நிச்சயதார்த்தம் நடத்த அவர்கள் தீர்மானித்திருந்தது தற்செயலாக எப்படி நின்று போய்விட்டதோ, அது போலவே, அந்தக் கலியான ஏற்பாடும் எப்படியாவது மாறிப் போக வேண்டும் என்று அவள் தியானம் செய்தபடி, தனது பசி தாகங்களை அதிகமாய்ப் பொருட்படுத்தாமல் படுத்திருந்த சமயத்தில் தனது தந்தை இடத்திலிருந்து அந்த விபரீதச் செய்தி வரவே, "ஆகா! நம்முடைய தகப்பனார் மன்னார்குடியாரை இன்னம் கொஞ்ச நேரத்தில் இங்கே அழைத்துக் கொண்டு வந்து விடுவாரே உடனே அவர்கள் வந்து என்னைப் பார்ப்பார்களே! நான் அவர்களிடம் கொண்டுள்ள அருவருப்பு எப்படியும் வெளிபட்டுப் போகுமே! நான் என்ன செய்யப் போகிறேன்! அவர்களிடம் நான் அவமரியாதையாக நடந்து கொண்டால் என் தகப்பனாருக்கு என் மேல் கோபமும் மனஸ்தாபமும் உண்டாகுமே! நான் உடுத்திக் Inn.6%l.L.III-3