பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மாயா விநோதப் பரதேசி கொண்டிருக்கும் இந்த வெள்ளைப் புடவையைக் கண்டால், இவர்களுக்கும், எவளாவது ஒரு தாசிப் பெண்ணின் நினைவல்லவா உண்டாகும்! ஆகா! என்ன நாடு நம் தமிழ்நாடு! என்ன மனிதர்கள் நம் தமிழ் மக்கள் இவர்களுடைய அஞ்ஞான இருள் எப்போது விலகுமோ! இவர்களுடைய மூடநம்பிக்கை களும், நடையுடை பாவனைகளும் எப்போது இவர்களை விட்டொழியுமோ தெரியவில்லையே! நிர்வாண தேசத்தில், ஆடையுடுத்தியவன் அசடனென்ற பழமொழி நம்முடைய தேசத்து மனிதருக்குத் தான் நன்றாகப் பொருந்துகிறது. மன்னார் குடியார் வீட்டுப் பெண்பிள்ளைகள் இங்கே வந்தவுடன், எப்படியும் என்னைப் பார்க்க வருவார்கள். நான் அவர்களைப் பார்க்காமல், ஏதாவது தந்திரம் செய்யலாம் என்றால், அது பலிக்காது போலிருக்கிறது. எனக்கு உடம்பு சரியாக இல்லை என்று கட்டிலில் துப்பட்டியால் உடம்பு முழுதும் மூடிக் கொள்ளலாம் என்றாலோ, எத்தனை நாள்கள் தான் படுத்திருக்க முடியும். ஆகா! என்ன தருமசங்கடம் இது!" என்று தனது கைகளைப் பிசைந்து கொண்டு சஞ்சலக் கடலில் ஆழ்ந்தவளாய் இரண்டு நாழிகை காலம் வரையில் படுத்திருந்த மனோன்மணி யம்மாள் கடிகாரத்தைப் பார்த்தாள். மாலை 6 மணி அடிக்கும் சமயமாக இருந்தது. அவளது மனம் பதறியது. இருதயம் தடதடவென்று அடித்துக் கொண்டது. கைகளும், கால்களும் உடம்பும் வெலவெலத்துச் சோர்ந்து மூலைக்கு மூலை தாறு மாறாய்ச் சென்றன. ஏதோ நினைவைக் கொண்டவள் போல அவள் கட்டிலை விட்டெழுந்து அங்குமிங்கும் இரண்டு மூன்று தடவை போய் வந்து உலாவிய பின்னர், மேஜையின் மீது கிடந்த கொத்துச் சாவியைத் தனது கையில் எடுத்துக் கொண்டு, அந்த அறையை விட்டு வெளியில் போய் பக்கத்தில் இருந்த இன்னோர் அறைக்குள் நுழைந்து, அவ்விடத்தில் ஒரு மூலையில் இருந்த ஒரு பெரிய பெட்டியைத் திறந்தாள். இறந்து போன அவளது தாயினால் உபயோகிக்கப்பட்டவையும், வெகுகாலமாய் வாசனையூட்டப் பெற்று பத்திரமாய் வைக்கப் பெற்றிருந்தவையு மான ஐந்தாறு பட்டுச் சேலைகளும், ஏராளமான ஆபரணங்களும் அந்தப் பெட்டிக்குள் காணப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலே