பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - மாயா விநோதப் பரதேசி அழைத்துக் கொண்டு வந்ததை கண்ட மனோன்மணியம்மாள் தான் புதிய விதமாய் மாறியிருந்ததைக் கருதி ஒருவித லஜ்ஜையும் சஞ்சலமும் அடைந்தவளாய் அவளை நோக்கி மிருதுவாகப் பேசத் தொடங்கி, "ஏன் அம்மா என்ன விசேஷம்?" என்றாள். உடனே வேலைக்காரி, "மன்னார்குடியில் இருந்து வந்திருக்கும் புது சம்பந்திகளை அழைத்துக் - கொண்டு எஜமானர் வந்து விட்டார்கள். அவர்களுக்காக ஒழித்துவிடப்பட்டிருக்கும் விடுதியில் அவர்கள் வந்திறங்கி இருக்கிறார்கள். உங்களுக்கு மாமியார் ஆகப் போகிற அம்மாளும், அவர்களுடைய மூத்த மருமகளும் உங்களைப் பார்க்க இதோ வருகிறார்கள். உங்களோடு கூட இருந்து அவர்களை உபசரிக்கும்படி எஜமானர் என்னை அனுப்பினார்கள். வெள்ளை ஆடைகளை விலக்கிவிட்டு பட்டுப் புடவை முதலியவைகளை உபயோகிக்கும் படியும் எஜமானர் சொல்லச் சொன்னார்கள். நான் சொல்வதற்கு முன் நீங்களே அதைச் செய்து விட்டீர்கள். நல்லதாயிற்று. வாருங்கள் உங்களுடைய விடுதிக்குப் போவோம். அவர்கள் வந்து விடுவார்கள்" என்றாள். அதைக் கேட்ட மனோன்மணியம்மாள் தான் என்ன செய்வ தென்பதை அறியாது மனக்குழப்பமும், கலக்கமும், சஞ்சலமும் அடைந்தாள். தான் வேண்டாம், வேண்டாம் என்று எவ்வளவு தான் விலகினாலும், மன்னார்குடியாரது சம்பந்தமாகிய வலை தன்னை விடாமல் நான்கு பக்கங்களிலும் வந்து வளைத்துக் கொண்டிருக்கிறதே என்று அவள் நினைத்து வருந்தினாள் ஆனாலும், எப்படியாவது தான் பிரயாசைப்பட்டு அவர்கள் இரண்டொரு நாள் இங்கே இருக்கும் வரையில் தான் அவர்களது மனப்போக்கின்படி இருந்து விட்டு, அவர்கள் போன பிறகு எப்படியாவது முயன்று அந்தக் கலியாணத்தைத் தடுத்து விட வேண்டும் என்ற முடிவைச் செய்து கொண்டவளாய், அவ்விடத்தை விட்டு வேலைக்காரியோடு தனது விடுதிக்குப் போய்ச் சேர்ந்தாள். வரப் போகிறவர்கள் நாற்காலி முதலிய உயர்வான ஆசனங்களில் உட்கார மாட்டார்கள் என்ற எண்ணம் தோன்றியது ஆகையால், அவள் வேலைக்காரியை ஏவி, தானும் உதவி செய்து, அவ்விடத்தில் இருந்த நாற்காலிகளையும் சோபா