பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மாயா விநோதப் பரதேசி நான் போய் இராத்திரிக்கு வேண்டிய பலகாரங்களைத் தயார் செய்ய ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறினாள். உடனே திரிபுரசுந்தரியம்மாள், "நான் இப்போது உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது சரியல்ல. மனோன்மணியம்மாள் இப்போது தான் முதன் முதலாக நம்மைப் பார்ப்பதால், அவள் நிரம்பவும் கிலேசப் படுகிறாள். இந்த நிலைமையில் அவள் நம்மிடம் சரியாய்ப் பேச முடியாது. அவள் அதிகமாய்ப் பேசும்படி நாம் இப்போது செய்வது அவளை உபத்திரவிப்பது போல இருக்கும். அதுவுமன்றி எனக்கு அவசரமான வேலையும் இருக்கிறது. எஜமானருக்கு மத்தியானமே உடம்பு சரியாக இல்லை, அவருக்கு எது இதமான பலகாரம் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு தான் நாம் அதைத் தயாரிக்க வேண்டும். அதற்கு நானே போக வேண்டும். மனோன்மணியம்மாள் தன்னுடைய வழக்கப்படி சுயேச்சையாக இருக்கட்டும்" என்று அன்பாகக் கூறிய பின், மனோன்மணியம்மாளை ஆசையோடு இன்னொரு முறை பார்த்து, "அம்மா! நீ இரு நான் மறுபடியும் வந்து பார்க்கிறேன்" என்று கூறிய வண்ணம் வடிவாம்பாளையும் தனது வேலைக்காரி யையும் அழைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு தாங்கள் இறங்கியிருந்த பக்கத்து விடுதிக்குச் சென்று விட்டாள். தங்களுக்காக ஒழித்துவிடப்பட்டிருந்த வசதியான விடுதியில், வேலாயுதம் பிள்ளையும் அவரைச் சேர்ந்த மற்றவர்களும் அன்றைய இரவில் நிரம்பவும் செளகரியமாக இருந்தனர். பட்டாபிராம பிள்ளை அளவற்ற அன்பும் வணக்கமும் காட்டி அவர்களுக்குத் தேவையான செளகரியங்கள் அனைத்தையும் காமதேனுவைப் போலப் பொழிந்தார். அன்றைய தினம் மாலையில் பட்டாபிராம பிள்ளை போலீஸ் கமிஷனரிடம் போய்ப் பேசிவிட்டு வந்தபின், மாலை sobg)! மணிக்கே ஐம்பது போலீஸ் ஜெவான்கள் கத்தி துப்பாக்கி முதலிய பாதுகாப்புகளுடன் வந்து அவர்களது பங்களவைச் சுற்றிலும் நின்று நிரம்பவும் விழிப்பாகவும் எச்சரிப்பாகவும் அந்த இரவு முழுதும் காவல் காத்திருந்தனர். ஆயினும் பட்டாபிராம பிள்ளை, வேலாயுதம் பிள்ளை, கண்ணப்பா ஆகிய எல்லோரும் இரவில்