பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 4? எவ்விதமான விபரீத சம்பவம் நேருமோ என்று மிகுந்த கவலையும் கலக்கமும் கொண்டு தூக்கமே பிடியாதவர்களாய் விழித்திருந்தே அந்த இரவைப் போக்கினர். பெண் பாலாரும் கவலை கொண்டு வருந்தி வெகு நேரம் வரையில் விழித்திருந்து பிறகு மெய்ம்மறந்து துங்குவதும், அல்லல்பட்டு விழித்துக் கொள்வதுமாய் அந்த இரவைக் கடத்தினர். மறுநாட் காலையில் எல்லோரும் தமது காலைக் கடன்களை முடித்துக் கொள்ள, பட்டாபிராம பிள்ளை வேலாயுதம் பிள்ளை முதலியோர் இருந்த இடத்திற்குப் போய், "அண்ணா போலீஸ் ஜெவான்கள் நேற்று இரவு முழுதும் கண் கொட்டாமல் நிரம்பவும் ஜாக்கிரதையாக இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்களாம். எதிரியைச் சேர்ந்த மனிதர்கள் யாரும் வரவே இல்லையாம். நாம் காவல் போட்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு வராமல் இருந்து விட்டார்களோ, அல்லது, அந்தக் கைதி ஜெவானிடம் சொன்னது தான் பொய்யான தகவலோ, உண்மை இன்னதென்று தெரியவில்லை. இருந்தாலும் இன்னம் சில தினங்கள் வரையில் போலீஸ் ஜெவான்களில் பத்துப் பேர் இரவில் வந்து காவல் காத்திருக்கும்படி ஏற்பாடு செய்திருக்கி றேன். இன்றைய தினம் நான் உங்களுடன் கூடவே இருக்க எண்ணுகிறேன் ஆகையால், கச்சேரிக்குப் போகாமல் இருக்கும்படி ரஜாவுக்கு எழுதிவிட்டேன். இன்றைக்கு அந்த கோபாலசாமியின் நிலைமை எப்படி இருக்கிறதென்பதை நான் போய்ப் பார்த்து விட்டு போலீஸ் கமிஷனரையும் கண்டு பேசிவிட்டு வருகிறேன். அதற்கு முன் உங்களிடம் ஒரு சிறிய விண்ணப்பம் செய்து கொள்ள எண்ணுகிறேன். நம்முடைய பிள்ளையாண்டான் காண்ாமல் போயிருப்ப்தனால் நாம் எல்லோரும் நிரம்பவும் கவலை கொண்டு சஞ்சலப்பட்டு உழலுகிறோம். எங்களை விட நீங்கள் எல்லோரும் இன்னம் பதினாயிரம் மடங்கு அதிகமாய்த் துயரக் கடலில் முழுகிக் கிடக்கிறீர்கள். நேற்று நாம் செய்ய எத்தனித்த சுபகாரியம் நிறைவேறாமல் போனது ஒரு பக்கத்தில் மனசில் உறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த அசந்தர்ப்ப வேளையில், நாம் சந்தோஷகரமான காரியம் எதையும் செய்ய நம்முடைய மனம் இடந்தராது. இருந்தாலும், நான் எவ்வளவு தான் தவம் செய்தாலும், தங்களைப் போன்ற உத்தமர்கள் என்