பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 43 இன்று முதல் மூன்று தினங்களுக்கு நான் சுத்த பட்டினியாய் இருந்து சிவபூசை செய்யத் தீர்மானித்திருக்கிறேன். நான் பட்டினியாய் இருக்கையில் மற்றவர்கள் சாப்பிட மாட்டார்கள்: ஒரு நாளைக்கு ஒரு தரம் ஏதாவது பலகாரம் செய்வார்கள். இந்த மூன்று தினங்களும் கழிவதற்குள் நமக்கு ஈசன் அருள் பிறந்து பையன் அகப்பட்டுப் போவானாகில், உங்களுடைய பிரியத்தை நாங்கள் எல்லோரும் வட்டியும் முதலுமாகப் பூர்த்தி செய்து வைக்கிறோம். நான் வரும்போது என் பூஜைப் பெட்டியையும் கொண்டுவந்திருக்கிறேன். இந்தப் பூஜை விஷயத்தில் நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். எனக்கு தினம் ஒன்றுக்கு அர்ச்சனைக்கு ஒரு வண்டி புஷ்பம் வேண்டும். முதல் நாள் பாரிஜாதப் புஷ்பம், இரண்டாம் நாள் மல்லிகை புஷ்பம், மூன்றாம் நாள் ரோஜா புஷ்பம்; இம்மாதிரி மூன்று தினுசு புஷ்பங்களாய் வர வழைத்துக் கொடுக்க வேண்டும். இது தான் நான் உங்களிடம் கோருவது" என்றார். அதைக் கேட்ட பட்டாபிராம பிள்ளை அவரது நோக்கம் போல நடந்து கொள்ளத் தீர்மானித்து, அவ்வாறே புஷ்பம் தயாரித்துத் தருவதாய்ச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு போய் விட்டார். வேலாயுதம் பிள்ளை முதலியோர் இருப்பதற்காக பட்டாபிராம பிள்ளையினது பங்களாவின் முதல் உப்பரிகையின் வடபாகம் முழுதும் ஒழித்து விடப்பட்டிருந்தது; அதன் மத்தியில் ஒரு பெரிய கூடமும், அதைச் சுற்றிலும் பல விடுதிகளும் இருந்தன. எல்லா இடங்களிலும் நாற்காலிகள், மேஜைகள், கட்டில்கள், சோபாக்கள், மின்சார விளக்குகள், மின்சார விசிறிகள், பூத்தொட்டிகள், தண்ணிர்க் குழாய்கள் முதலிய சகலமான அலங்காரங்களும் வசதி களும் சம்பூர்ணமாக நிறைந்திருந்தன. அவர்களுக்கு விடப் பட்டிருந்த பாகம் முழுதும் அன்றைய தினம் காலையில் ஒரு மாசுமறுவில்லாமல் சுத்தி செய்யப்பட்டதன்றி, அதன் மத்தியில் இருந்த பெருத்த கூடமே சுவாமி பூஜை செய்வதற்குத் தகுந்த இடம் என்று அவர்கள் தீர்மானம் செய்தனர். அந்தக் கூடத்தில் இருந்த நாற்காலி சோபாக்கள் முதலிய பழைய சாமான்கள் யாவும் விலக்கப்பட்டுப் போயின. திரிபுரசுந்தரியம்மாளும், வடிவாம்