பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மாயா விநோதப் பரதேசி பாளும் சேர்ந்து அந்தக் கூடத்தை நன்றாக மெழுகிப் பெருக்கி, எங்கு பார்த்தாலும் அழகான கோலங்களையும், செங்காவிப் பட்டைகளையும் நிரப்பி விட்டனர். அதன் ஒரு பக்கத்தில் உயர்வான பீடம் ஒன்று போடப்பட்டு, அதன்மேல் பூஜைப் பெட்டி வைக்கப்பட்டது. அதைச் சுற்றிலும் சுவர் முழுதும் சுவாமியின் படங்கள் ஏராளமாக மாட்டப்பட்டன. பூஜைப் பெட்டிக்கெதிரில் உயரமானவையும் பளிச்சென்று மின்னுகின்ற வையுமான நாலைந்து குத்து விளக்குகள் வைக்கப்பட்டன. திரிபுர சுந்தரியம்மாள் அந்த விளக்குகளில் நெய்யையும் பருத்தி நூல் திரிகளையும் நிரப்பி வைத்தாள். கண்ணப்பா கடைக்குப் போய் வண்டிக் கணக்கில் தேங்காய், பலவகைப்பட்ட பழங்கள், வாசனைத் திரவியங்கள், அபிஷேகத்திற்குரிய கரும்பு, நெய், தேன், பால், தயிர், பன்னி முதலிய. வஸ்துக்கள் யாவற்றையும் வாங்கிக் கொணர்ந்து, அந்தக் கூடத்தின் பெரும் பாகத்தையும் நிறைத்து விட்டதன்றி, அன்றைய தினம் முதல் ஒவ்வொரு தினமும் ஏழை எளியவர்களான ஆயிரம் ஜனங்களுக்கு அன்னமிடு வதற்கும் தக்க ஏற்பாடுகள் செய்தான். பகல் 10-மணிக்குள் சகலமான ஏற்பாடுகளும் முடிந்து போயின. அந்தக் கூடம் தத்ரூபம் தெய்வ லோகம் போல விளங்கியது. வேலாயுதம் பிள்ளை பிராயச்சித்த மந்திரத்தைச் சொல்லி ஸ்நானம் செய்து, நார்மடி வஸ்திரங்களைத் தரித்து, விபூதி, உருத்திராக்ஷம் முதலியவற்றை அணிந்து பூஜைப் பெட்டிக்கு முன்னால் போடப்பட்டிருந்த பெருத்த மனைப் பலகையின் மீது :א நிஷ்டையில் அமரும் பெருத்த யோகீசுவரர் போல சுத்தாத்விக குணமும், பக்திப் பெருக்கும் உள்ளடக்கிய விசனமும் நன்றாக ஜ்வலித்த முகத் தோற்றத்தோடு சிவப்பழமாய்க் காணப்பட்டார். அவரது திருவாய் அடிக்கடி, "சிவ, சிவ, சம்போ, சங்கரா, மகாதேவா, கருணா நிதே, என் அப்பனே!" என்ற நாமதாரகத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தது. அவரது தோற்றம் இருந்ததற்குத் தகுந்தபடி கண்ணப்பா, திரிபுரசுந்தரியம்மாள், வடிவாம்பாள், வேலைக்காரன், வேலைக்காரி ஆகிய எல்லோரும் நீராடி மகா பரிசுத்தமான உடைகளை அணிந்து, விபூதி தரித்து,