பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 45 வேலாயுதம் பிள்ளையின் சிஷ்யகோடிகளாய் விளங்கி, அவர் மனதால் நினைக்கும் முன், அவருக்கு வேண்டிய பணிவிடை களைச் செய்த வண்ணம் நின்றனர். வடிவாம்பாள் பூஜைப் பாத்திரங்களைப் பளிச்சென்று சுத்தி செய்து, சந்தனம் அரைத்து வைத்தாள். திரிபுரசுந்தரியம்மாள் படங்களுக்குப் புஷ்பமாலைகள் சாத்தி, சந்தனப் பொட்டுகள் வைத்தாள். கண்ணப்பா வாழைப் பழம், மாம்பழம், பலாப்பழம் முதலிய பழவகைகளை நறுக்கி தட்டுகளில் வைத்ததன்றி, எங்கும் கமகமவென்று மணம் கமழத் தக்க ஊதுவர்த்திகளை ஏராளமாகக் கொளுத்தி வைத்து விட்டு, மகா நைவேத்தியங்களைக் கொணர்ந்து சேர்த்துக் கொண் டிருந்தான். அவ்வாறு நாம் விவரிக்க இயலாத வகையில் அவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி அபாரமான எண்ணிறந்த ஏற்பாடுகளைச் செய்து சிவபூஜையை நடத்தலாயினர். வேலாயுதம் பிள்ளையின் வேண்டுகோளிற் கிணங்க, பட்டாபிராம பிள்ளை ஒரு வண்டி புஷ்பம் வரவழைத்துக் கொடுத்ததன்றி, அன்றைய தினம் கச்சேரிக்குப் போகாமல் அவர்களுக்கு அநுசரணையாக இருந்து வந்தார். அவரும் மனோன்மணியம்மாளும் அன்றைய தினம் மடியாக இருந்து தீபாராதனை சமயத்தில் அங்கே வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிரசாதம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று வேலாயுதம் பிள்ளை காலையிலேயே கேட்டுக் கொண்டார் ஆதலால், அதற்கிணங்க பட்டாபிராம பிள்ளை அப்படியே ஆயத்தமானார். அந்தச் செய்தியை அவர் அன்றைய தினம் காலையில் வேலைக்காரி மூலமாய் மனோன்மணியம்மாளுக்கும் சொல்லி அனுப்பினார். அவர்கள் எல்லோரும் மூன்று தினங்களுக்கு உண்ணா விரதம் இருந்து, சிவபூஜை செய்யப் போகிறார்கள் என்ற செய்தியைக் கேட்கவே, மனோன்மணியம்மாள் உடனே கலகலவென்று வாய்விட்டுச் சிரித்து விட்டாள். முதல் நாள் மாலையில் அவள் தனது வெள்ளை ஆடைகளை மாற்றி, பட்டாடைகளையும் பல ஆபரணங்களையும் அணிந்து கொண்டது, அதன் பிறகு திரிபுர சுந்தரியம்மாள், வடிவாம்பாள் ஆகிய இருவரையும் வரவேற்று,