பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மாயா விநோதப் பரதேசி அவர்களால் கொடுக்கப்பட்ட பொருட்களைப் ೧-5 முதலிய விவரங்கள் முன்னரே கூறப்பட்டன அல்லவா. அப்போது முதல் அவளது மனம் ஒரு நிலையில் நிற்காமல் கோடானுகோடி எண்ணங்களையும் யோசனைகளையும் கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்தது. வேலாயுதம் பிள்ளை முதலியோர் தன்னைப் பற்றி துஷணையான சொல் எதுவும் சொல்லக் கூடாதென்ற யோசனையினால், அவர்கள் அந்த ஜாகையில் இருக்கும் வரையில், தான் அவர்களது மனப்போக்கிற்குத் தகுந்தபடி நடந்து கொண்டாள் என்பதும், முக்கியமாக அவள் தனது தந்தையின் கோபத்திற்குப் பாத்திரமாகக் கூடாதென்ற நினைவினாலேயே அவ்வாறு தனது சுய அபிப்பிராயத்தை ஒரு பக்கத்தில் வைத்து விட்டு, தன் இஷ்டத்திற்கு விரோதமாகவே அந்தக் காரியம் செய்தாள் என்பதும் நமது வாசகர்களுக்கு விளங்கி இருக்கும். அவர்கள் தன்னிடம் எவ்வளவு தான் வாஞ்சையாகவும் மரியாதை யாகவும் நடந்து கொண்டாலும், அவர்கள் மேலான தத்துவங் களும், உயர்வான அறிவும் அற்ற சுத்த கர்னாடக மனிதர்கள் என்ற அபிப்பிராயத்தையும், அவர்களது வீட்டில் தான் வாழ்க்கைப் படவே கூடாது என்ற உறுதியையுமே அவள் அப்போதும் கடைப்பிடித்திருந்தாள். அவர்கள் உண்ணாவிரதம் இருந்து சிவபூஜை செய்யப் போகிறார்கள் என்பதைக் கேட்கவே, அவள் கொண்டிருந்த அபிப்பிராயம் முன்னிலும் பன்மடங்கு பலமாக உறுதிப்பட்டது. அவள் இங்கிலீஷ் பயின்ற கலாசாலை யில் கடவுளைப் பற்றியும், மதசம்பந்தமாகவும் அவள் எதையும் கற்றுக் கொள்ளாமல், இங்கிலீஷ் பாஷையின் உயர்வைப் பற்றியும், அதன் இலக்கியங்களில் உள்ள இன்பத்தை அனுபவிப்பதையும், வெள்ளைக்காரர்கள் செய்த அல்லது செய்யும் அரும்பெரும் செயல்களைப் பற்றியும் ஏராளமாகத் தெரிந்து கொண்டிருந்தாள் அதுவுமன்றி மனிதனே தெய்வம் என்றும், அவனால் சாதிக்க இயலாத காரியம் எதுவுமில்லை என்றும், தெய்வம் என்பது ஒன்று இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்றும் அவள் நினைத்து நாஸ்திக மனப்பான்மை கொண்டிருந்தாள். வெள்ளைக்காரரது கொள்கையின்படி, மோக்ஷ லோகத்தில் இருக்கும் கடவுள் எல்லோருக்கும் பிதா என்பதையும், மனிதர்