பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 47 எல்லோரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்பதையும் நாம் தெரிந்து கொள்வதே போதுமானது என்றும், அவரை ஒரு நாளைக்கு மூன்று தடவை மனதால் ஸ்தோத்திரம் செய்வதைத் தவிர, மற்ற வெளிப்படையான சாங்கியங்களும், மந்திரங்களும், கிரியைகளும் அர்த்தமற்றவை என்றும் அவள் உறுதியாக எண்ணி இருந்தாள். நமது ஜனங்கள் கல்லையும் செம்பையும் சர்வ வல்லமையுள்ள தெய்வம் என்று வைத்து அதற்குப் பூஜை, நைவேத்தியம், தூபதிபம், அர்க்கியம் முதலியவற்றைப் புரிவது கேவலம் அக்ஞான இருளே அன்றி வேறல்ல என்பதும் அவளது கொள்கை. அதுவுமன்றி, வெள்ளைக்காரர்கள் எந்த விஷயத் தையும் எந்த சாஸ்திரத்தையும் கண்காணும்படி நிரூபித்துக் காட்டுகிறவர்களன்றி, மூட நம்பிக்கையாக எந்தக் கொள்கையை யும் ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் அல்ல ஆதலால், கடவுள் விஷயத்திலும் அவர்கள் கொண்டுள்ள கொள்கைதான் சரியானது என்ற அபிப்பிராயத்தை அவள் உறுதியாக வைத்திருந்தாள். அதுவுமன்றி, வெள்ளைக்காரர்கள் யந்திரங்களைக் கொண்டும், ரசாயன மூலமாகவும், மின்சார சக்தி, பிராணவாயு முதலியவற்றை சாரமாக எடுத்து புட்டிகளில் அடைத்துக் காட்டுவது போல, அவர்கள் என்றைக்காவது ஒரு தினம், சாஸ்திர ரீதியாகவும், மனிதரது புத்தி உணர்ந்து நம்பும்படியாகவும், கடவுளைக் கண்டு பிடித்து சாரமாகத் திரட்டி புட்டிகளில் அடைத்துக் காட்டுவார்கள் என்ற கொள்கையையும் அவள் கொண்டிருந்தாள். ஆகவே, வேலாயுதம் பிள்ளை ஸ்படிகத்தினால் ஆன ஒரு லிங்கத்தை வைத்து சிவபூஜை செய்து, அதன் மனம் இரங்க வேண்டும் என்று மூன்று நாட்கள் பட்டினி கிடக்கப் போகிறார் என்பதையும், அதன் பலனாக, கந்தசாமி அகப்பட்டுப் போய் விடுவான் என்று அவர் அபிப்பிராயப்படுகிறார் என்பதையும் கேட்கவே, அந்த மடந்தை தனக்குத் தானே நகைத்துப் புரளி செய்து கொண்டதன்றி, "நம்முடைய மூடஜனங்கள் தங்களுக்குப் பக்கத்தில் உள்ள காற்று சுத்தமான காற்றா அசுத்தமான காற்றா என்பதையும், நாம் குடிக்கும் ஜலத்தில் எத்தனை கிருமிகள் இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ள மாட்டாமல், அக்ஞான இருளில் கிடந்து பூச்சி புழுக்கள் போல நெளிகிறார்கள்.