பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - மாயா விநோதப் பரதேதி இவர்கள் மனிதரது கண்ணுக்கும் மனதிற்கும் எட்டாமல் மோடி லோகத்தில் இருக்கும் கடவுளின் தன்மையைக் கண்டு விட்டார்களோ குருவிக்குக் கூண்டே மோகூ லோகம் என்கிறபடி, அறிவையும் மூளையையும் உபயோகிக்கத் தெரியாத மூடர் களுக்குக் கல்லும் மண்ணுந்தான் கடவுள்" என்று துவகித்தவளாய், தான் செய்து கொண்ட தீர்மானத்திற்கு இணங்க, வெளிப் பார்வைக்கு, அவர்களுக்குத் தகுந்தபடி நடக்க ஏற்பாடு செய்யத் தொடங்கினாள். ஆகவே, அன்றைய தினம் வடிவாம்பாள் எவ்வாறு ஸ்நானம் செய்து ஆடை அணிகிறாள் என்பதை வேலைக்காரியின் மூலமாய் அவள் தெரிந்து கொண்டு, தானும் மஞ்சள் பொடி முதலியவற்றை முகத்திற்கு உபயோகித்து ஸ்நானம் செய்து, முதல் நாள் திரிபுர சுந்தரியம்மாளால் வழங்கப் பட்ட பட்டுச் சேலை ரவிக்கை முதலியவற்றையும், ஏராளமான ஆபரணங்களையும் அணிந்து, நெற்றி, கைகள், வயிறு முதலிய இடங்களில் விபூதி பூசிக் கொண்டு பிரசாதம் பெறுவதற்கு ஆயத்தமாக இருந்தாள். வேலாயுதம் பிள்ளை காலை பத்துமணி முதல் பகல் இரண்டு மணி நேரம் வரையில் ஒரே நிலையில் உட்கார்ந்து சிவபூஜை செய்து கொண்டிருந்தார். கண்ணப்பா, திரிபுரசுந்தரியம்மாள், வடிவாம்பாள் ஆகிய மூவரும் கைகட்டி வாய் புதைத்து பயபக்தி விநயத்தோடு பக்கத்தில் நிற்க, வேலாயுதம் பிள்ளை பெருத்த புத்திர காமேஷ்டி யாகம் செய்பவர் போல வெகு நேரம் வரையில் சுவாமிக்கு அபிகேஷகம் அர்ச்சனை முதலியவைகளை நிரம்பவும் விரிவாகவும் உருக்கமாகவும் பக்தி ததும்பிய மனத்தோடும் செய்து கொண்டே போனார்; அவர் அர்ச்சனை செய்த புஷ்பம் பூஜைப் பெட்டிக்கெதிரிலும் சுவாமியின் மேலும் மலை போலக் குவிந்து கிடந்தது. விளக்குகளின் நெய் மணமும் தூபத்தின் தசாங்கப் புகையும், ஊதுவர்த்தி, சந்தனம், பன்னர், புஷ்பம் முதலிய வற்றின் பரிமள கந்தமும், மகா நைவேத்தியங்களின் பரிபக்குவ மணமும் ஒன்றுகூடி அது உண்மையிலேயே ஈசுவர சன்னி தானமோ என்ற பிரமிப்பை உண்டாக்கின. முடிவாக வேலாயுதம் பிள்ளை தமது இடது கையில் மணியை வைத்து அடித்துக் கொண்டு, வலது கையால் நைவேத்தியங்களை சுவாமிக்கு