பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 49 நிவேதனம் காட்டிய பின், எழுந்து நின்று கொண்டு கற்பூரங் கொளுத்தி ஆராத்தி எடுக்கத் தொடங்கினார். அதற்கு சற்று முன் பட்டாபிராம பிள்ளையும், மனோன்மணியம்மாளும் அவ் விடத்திற்கு வந்து சேர்ந்தனர். பட்டாபிராம பிள்ளை தாம் இங்கிலிஷ் கற்று பெரிய உத்தியோகத்தில் அமர்ந்த பிறகு அத்தகைய சடங்குகளைப் பார்க்காமல் இருந்தவர் ஆதலால், அவருக்குள் மறைந்து கிடந்த தெய்வ பக்தியும் உருக்கமும் உடனே வெளிப் பட ஆரம்பித்தன. அவர் தமது கைகளை எடுத்து குவித்தபடியே வணக்க வொடுக்கமாக நின்றார். மனோன்மணியம்மாளுக்கு அந்தப் பூஜை குழந்தை விளையாட்டைப் போலத் தோன்றிய தன்றி, உண்மையில் அவளுக்கு தெய்வ பக்தியாவது புளகாங்கித மாவது தோன்றவில்லை. சர்வ வல்லமையுள்ள ஜெகத்பிதாவான கடவுள் ஒரு சிறிய கல்லில் இருப்பதாக அவர்கள் நினைத்துப் பூஜை செய்வது கடவுளை அவமரியாதைப்படுத்தும் செய்கையே அன்றி, அவரை ஸ்தோத்திரம் செய்வதாகாது என்று அவள் எண்ணி, தன் மனதிற்குள் அருவருப்பும், புரளியும் செய்தவ ளாய், வெளிப்பார்வைக்குத் தனது தந்தை செய்வது போல நடிக்கலானாள். முடிவாக வேலாயுதம் பிள்ளை எழுந்து நின்று கற்பூர ஆரத்தி எடுத்து தமது பக்திப் பெருக்கு முழுதையும் ஆறாய்ப் பெருகவிட்டு அதைச் சுழற்றியபடி அடியில் வரும் பாடல்களைப் பாட ஆரம்பித்தார்: 1. அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆநந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்ததெது, தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும்படிக் கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது, மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது, சமய கோடிகளெலாம் தன்தெய்வம் என்தெய்வமென் றெங்குத் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது, எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்லதொரு சித்தாகி இன்பமாய் unr.so.u.HH-4