பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மாயா விநோதப் பரதேசி என்றைக்கு முள்ளதெது, மேல் கங்குல்பகல் அறநின்ற எல்லையுளதெது அது கருத்திற் கிசைந்த ததுவே கண்டனவெலாம் மோன உருவெளியதாகவும் கருதி அஞ்சலி செய்குவாம். ஊர் அனந்தம், பெற்றபேர் அநந்தம், சுற்றும் உறவநந்தம், வினையினால் உடல் அநந்தம், செயும்வினை அநந்தம், கருத்தோ அநந்தம், பெற்றபேர் சீர் அநந்தம், சொர்க்கம் நரகமும் அநந்தம், நல் தெய்வமும் அநந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அநந்தம், அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து கார் அநந்தங்கோடி வருவித்ததென அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருதரிய ஆநந்த மழைபொழியும் முகிலைநம் கடவுளைத் துரிய வடிவைப் பேர் அநந்தம் பேசி மறை அநந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பைப் - பேசரும் அநந்த பத ஞான ஆநந்தமாம் பெரிய பொருளைப் பணிகுவாம். அத்துவித வத்துவைச் சொற்பிரகாசத் தணியை அருமறைகள் முரசறையவே அறிவினுக் கறிவாகி ஆநந்த மயமான ஆதியை அநாதி ஏக தத்துவ சொரூபத்தை மதசம்மதம் பெறாச் சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோம நிலையை நித்த நிர்மல சகித நிஷ்பிரபஞ்சப் பொருளை நிர்விஷய சுத்தமான - நிர்விகாரத்தைத் தடத்தமாய் நின்றொளிர்