பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் பாகம் மாயா விநோதப் பரதேசி ★ 女 ★ 12-வது அதிகாரம் தொடர்ச்சி... மனோன்மணியம்மாளினது நிலைமை அங்ங்னமாக, பட்டாபி ராம பிள்ளைக்கும், வேலாயுதம் பிள்ளைக்கும் நடந்த சம்பாஷ னையை நாம் இனி விஸ்தரிப்போம். கடைசியாக வேலாயுதம் பிள்ளை கேட்ட கேள்விக்கு மறுமொழியாக பட்டாபிராம பிள்ளை, "இல்லை அண்ணா! பிள்ளையாண்டானைப் பற்றி எவ்வித தகவலும் தெரியவே இல்லையே! நானும் என்னால் ஆன முயற்சிகளை எல்லாம் செய்து பார்க்கிறேன். இந்த ஊர்ப் போலீஸ் கமிஷனர் உத்தியோக தோரணையில் எனக்குக் கீழ்ப் பட்டவர்; அதுவுமன்றி, அவர் எனக்கு நிரம்பவும் வேண்டிய மனிதர், பையன் காணப்படவில்லை என்ற சங்கதி அவருக்குத் தெரிந்த நிமிஷம் முதல் அவர் இரவு பகல் இதே கவலை கொண்டு தம்மாலான பிரயத்தனங்களை எல்லாம் செய்து வருகிறார். இந்த நகரத்தில் உள்ள சகலமான போலிஸ் ஸ்டேஷன்களுக்கும் அவர் உடனே அவசரமாக இந்தத் தகவலைத் தெரிவித்து, ஆயிரக் கணக்கில் இந்த ஊரில் இருக்கும் போலிஸ் ஜெவான்களுக்கும், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், இன்ஸ்பெக்டர்களுக்கும் பிள்ளை யாண்டானுடைய அங்கமச்ச அடையாளங்களைத் தெரிவித்து, ஓரிடம் விடாமல் தேடிப் பார்க்கும்படி செய்திருக்கிறார். அதுவு மன்றி இந்த ராஜதானியைச் சேர்ந்த மற்ற இருபத்தைந்து ஜில்லா வில் உள்ள போலிஸ் சூபரின்டென்டெண்டுகளுக்கும், ரயில்வே போலீசாருக்கும் இதைப்பற்றி அவசரமான செய்தி அனுப்பி, வெளியூர்களில் உள்ள சகலமான போலீஸ் சிப்பந்திகளுக்கும் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி நம்முடைய பிள்ளை யாண்டானைத் தேடும்படி செய்திருக்கிறார். நான் ஒரு மணிக்கு ஒரு தரம் டெலிபோன் மூலமாக இந்த நகரப் போலீஸ் கமிஷன