பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மாயா விநோதப் பரதேசி ரோடு பேசி ஏதாவது செய்தி தெரிந்ததா என்று கேட்டுக் கொண்டேதான் இருக்கிறேன். இன்று நான் என்னுடைய பங்களாவில் இருந்து புறப்பட்ட நிமிஷம் வரையில் அவரைப் பற்றிய தகவல் எதுவும் போலீசாருக்குத் தெரியவில்லை. அவர் ஏதாவது உத்தேசத்தோடு எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று புறப்பட்டு மன்னார்குடிக்குத்தான் வந்திருப்பார் என்றே உறுதியாக நம்பி இருந்தேன். அவர் அங்கே வரவில்லை என்று நீங்கள் தெரிவித்ததைப் பார்த்த பிறகுதான் எங்கள் மன நிலைமை அதிக குழப்பத்திற்கு வந்துவிட்டது. அவர் எங்கேதான் போயிருப்பார் என்ற குறிப்பே கொஞ்சமும் தெரியவில்லை; மாயமாய் மறைந்து போயிருக்கிறார். அடிபட்டு ஆஸ்டத்திரியில் கிடக்கும் மனிதனுக்குப் பிரக்ஞை அப்போதைக்கப்போது கொஞ்சம் கொஞ்சம் உண்டாகிறது. ஆனால், அவன் வாயைத் திறந்து பேசும் நிலைமைக்கு வரவில்லை. அவனோடு பேச்சுக் கொடுத்தால், அவன் உடனே கண்களை மூடிக்கொண்டு சோர்ந்து துங்கி விடுகிறான். அவன் எப்படியும் இன்னும் இரண்டு மூன்று தினங்களுக்குள் பேசும்படியான நிலைமைக்கு வந்து விடுவான் என்று டாக்டர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். அதுவரையில் நாம் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருந்து, அவன் சொல்லும் தகவலை வைத்துக் கொண்டுதான், நாம் நம்முடைய பிள்ளை யாண்டான் இருக்கும் இடத்தையும், இருக்கும் நிலைமையையும் கண்டுபிடிக்க வேண்டும். அவன் சரியான நிலைமைக்கு வந்தாலும், உண்மையான தகவலைத் தெரிவிக்கிறானோ இல்லையோ! அவன் சொல்வதை வைத்துக் கொண்டு தேடுவதைத் தவிர வேறு எவ்விதமான மார்க்கமும் இல்லை. நான் என் கடிதத்தோடு உங்க ளுக்கு அனுப்பிய புகைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்களே. அந்த மனிதன் இன்னான் என்ற அடையாளம் தெரிகிறதா?" என்றார். பட்டாபிராம பிள்ளை போலீசாரைக் கொண்டு அத்தனை ஏற்பாடுகளையும் முயற்சிகளையும் செய்திருந்தும், கந்தசாமி அகப் படவில்லை என்ற செய்தியைக் கேட்க, வேலாயுதம் பிள்ளை முதலிய எல்லோரும் கட்டிலடங்கா மனவேதனையும், ஏமாற்றமும், கலக்கமும் அடைந்து இடிந்து துயரக் கடலில் ஆழ்ந்து