பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 5 போயினர். அவர்களது தேகம் எல்லாம் சோர்ந்து உட்கார்ந்து போயிற்று. முகம் முற்றிலும் வாட்டமடைந்து கீழே சாய்ந்து போய் விட்டது. தாம் என்ன செய்வது, எங்கே போவது, தனது விசனத்தை எப்படி வெளியிடுவது என்பதை அறியாமல் அவர்கள் எல்லோரும் நெருப்புத் தணல்களின் மீது நிற்பவர் போலத் தத்தளித்தனர். உடனே வேலாயுதம் பிள்ளை கலெக்டரைப் பார்த்து, "நீங்கள் அனுப்பிய படத்தைப் பார்த்தோம். படத்தில் உள்ள மனிதன் விரோதிகளைச் சேர்ந்தவனல்ல. அவன் நம் முடைய கந்தசாமியோடு கூடவே படித்துக் கொண்டிருந்த எங்கள் ஊர்ப் பையன். அவனுடைய பெயர் கோபாலசாமி என்பது" என்றார். அதைக் கேட்ட பட்டாபிராம பிள்ளை திடுக்கிட்டு மிகுந்த வியப் பும், கலக்கமும் அடைந்து, "என்ன ஆச்சரியம் இது நம்முடைய பிள்ளையாண்டானோடு கூடப் படித்துக் கொண்டிருக்கும் பையன் எதற்காக உங்களுடைய மைத்துணி புருஷன் என்று சொல்லிக் கொண்டு எங்களிடம் வந்தான் என்பது தெரியவில் லையே! அவனோடு கூடவந்த யெளவனப் பெண் பிள்ளை யாராக இருக்கலாம்? அவனுக்குக் கலியாணம் ஆயிருக்கிறதா? அந்தப் பெண் அவனுடைய சம்சாரமாய் இருப்பாளா? அப்படி இருந்தாலும், அவர்கள் இருவரும் என்ன கருத்தை வைத்துக் கொண்டு எங்களிடம் வந்து, உங்களுடைய நடையுடை பாவனை களைப் பற்றிப் பெண்ணினிடம் பேசி, அவளுடைய மனசைக் கலைக்க முயன்றிருப்பார்கள் என்பது தெரியவில்லையே!" என்றார். உடனே வேலாயுதம் பிள்ளை, "நம்முடைய எதிரிகள் லேசான வர்கள் அல்ல. நாங்கள் இந்தப் பெண்ணை எங்கள் பையனுக்குக் கட்ட ஏற்பாடு செய்திருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு எதிரிகள் இதைத் தடுக்க ஏற்பாடு செய்திருக்கலாம். இந்தப் பெண்ணை அவர்களுடைய வீட்டில் கட்டிக் கொடுப்பதாக நீங்கள் - முன்னே அவர்களிடம் சொல்லி அவர்களைத் தண்டனைக்குக் கொண்டு போனிகள் அல்லவா. அந்த ஆத்திரமும் இருக்கலாம். கந்தசாமியோடு அன்னியோன்னியமாய்ப் பழகும் மனிதனாகிய இந்த கோபாலசாமிக்கு ஏதாவது பணம் கொடுத்து இவனை