பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மாயா விநோதப் பரதேசி வோம் என்றல்லவா சொல்லுகிறது. ஆகா! இப்பேர்ப்பட்ட சமரசமான குணம் வாய்ந்ததும், கடவுளின் குணாதிசயங்களை உள்ளபடி வர்ணித்து அவனது இருதயத்தை எட்டிப் பிடிப்பது மான மதம் வேறே எங்கே இருக்கிறது? ஆகா! இந்தப் பாக்களில் வர்ணிக்கப்பட்டுள்ள கடவுளின் லட்சணம் எதை வேண்டு மானாலும் எடுத்துக் கொண்டு, அந்த லட்சணம் தம்தம் கடவுளிடம் இல்லை என்று எந்த மதஸ்தராவது மறுக்க முடியுமா? அல்லது, அவர்கள் இவைகளைவிட கடவுளின் அருகில் போகக் கூடிய பதங்களை உபயோகிக்க முடியுமா? கடவுள் என்பது என்ன, அல்லது, யார் என்ற கேள்விக்கு வேறே எந்த ஜாதியாராவது இப்பேர்ப்பட்ட அத்யாச்சரியகரமானதும், சாரமானதும், சமரசமானதும், எவராலும் மறுக்க முடியாததும், இதற்கு மேல் சேர்க்க முடியாததுமான முடிவான விடையைக் கண்டு எழுதி இருப்பார்களா என்பதே சந்தேகம். "ஐயோ! நம்முடைய மனிதர்கள் சுத்த அஞ்ஞான இருளில் கிடந்து பூச்சி புழுக்கள் போல நெளியும் வண்டர்கள் என்றல்லவா நான் இது வரையில் நினைத்தேன். இப்பேர்ப்பட்ட மேதாவிகளும் நம்முடைய தேசத்தில் இருந்திருக்கிறார்களா? நிதிக்குவியல்கள் போன்ற இத்தகைய நூல்களும் நம் தேசத்தில் இருக்கின்றனவா? ஆகா! இப்போதுதான் நம்மவர்கள் கல்லையும், செம்பையும் வைத்துப் பூசை செய்வதன் உள் கருத்து எனக்குத் தெரிகிறது. மனிதர்களின் உடம்பு பிரம்மாண்டமாக நீடித்திருந்தாலும், அவர்களோடு நாம் பேசும் போது அவர்களது முகத்தைப் பார்த்துத்தானே பேசுகிறோம். அதுவுமன்றி, பிரம்மாண்டமான ஒரு வீட்டிற்குள், அல்லது கோட்டைக்குள், அல்லது, பட்டணத் திற்குள் நாம் நுழைய வேண்டுமானால், சிறியதாக உள்ள அதன் வாசலைத் தானே நாம் முதலில் அடைய வேண்டும். அது போல அகண்டாகாரமாயும், அண்டாண்ட பிரம்மாண்டமாயும், சகல ஜீவராசிகளாயும் நிறைந்துள்ள கடவுளை, நாம் அவற்றிற் கெல்லாம் பெரிதான ஒர் உருவத்தைத் தேடிப் பூஜிப்பது சாத்திய மாகாதல்லவா. எப்போதும் சபலித்து அலையும் தன்மையுடைய மனத்தை ஒருமுகப்படுத்தி, மனதால் மாத்திரம் கடவுளை ஸ்தோத்திரம் செய்வது நிலைத்ததாயிராது. எங்கும் நிறைந்துள்ள