பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 53 பரம்பொருள் ஒரு சிறிய கல்லிலும் இருப்பதாய் எண்ணி அதை அவருடைய முகம் போல மனதால் பாவித்து அகண்டாகாரமான பரமாத்மாவை ஸ்தோத்திரம் செய்வது எப்படிக் குற்றமாகும்? இவர் பாடிய பாக்களைக் கவனித்தால், நம்மவர் சிறிய கல்லை யும், மரத்தையும் பூஜை செய்யும் போது, எங்கும் நிறைந்துள்ள பரமாத்மாவை மனதால் நினைத்தே பூஜிக்கிறார்கள் என்பது இப்போது தான் தெரிகிறது. இப்பேர்ப்பட்ட அதிஅற்புதமான பொருள்கள் அடங்கிய புஸ்தகம் இங்கிலீஷ் பாஷையில் ஒன்றுகூட இல்லையே! ஆகா! இது வரையில் நான் என்ன பாஷையைக் கற்றேன்! என்ன விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்! ஒன்றுமில்லையே! ஐயோ! என் ஆயிசு காலத்தில் இத்தனை வருஷ காலமும், என் உயிரிலும் தேகத்திலும் பெரும் பாகத்தையும் இந்த அன்னிய பாஷையின் பொருட்டு, விரயம் செய்தேனே! சே என்னுடைய தகப்பனார் எனக்கு என்ன வழி காட்டினார் நம்முடைய சுய பாஷையில் உள்ள இப்பேர்ப்பட்ட அருமையான புஸ்தகங்களை நான் படிக்கும்படி செய்திருக்கக் கூடாதா ஆகா! இதுவரையில் நான் பட்டபாடெல்லாம் வியர்த்தம் வியர்த்தம்!" என்று மனோன்மணியம்மாள் தனக்குள் ளாகவே நினைத்து அடியோடு மாறுபட்டுப் புதிய மனுவியாகத் திரிந்து நிற்க, சிறிது நேரத்தில், வேலாயுதம் பிள்ளையின் சிவபூஜை அன்றைய பகலுக்கு அவ்வளவோடு முடிவு பெற்றது. பிறகு எல்லோருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பங்களா வின் வெளியில் ஆயிரக் கணக்கில் காத்திருந்த ஏழைகள் பரதேசி கள் முதலியோருக்கு வெகு நேரம் வரையில் அன்னமளிக்கப் பட்டதோடு பகல் பொழுது முடிய, இரவு வந்துவிட்டது. வேலாயுதம் பிள்ளை ஒரு கடுகளவு விபூதியை சுவாமி பிரசாதம் என்று வாயில் போட்டுக் கொண்டதே அவருக்கு அன்றைய ஆகாரம். அவரைச் சேர்ந்த மற்றவர்கள் இரண்டொரு பழத் துண்டுகளை உண்டு சிறிதளவு தண்ணிர் பருகினர். பட்டாபிராம பிள்ளைக்கும் மனோன்மணியம்மாளுக்கும் பசிப்பிணி தோன்றி வதைத்தது ஆனாலும், அவர்களும் தங்களது மனத்தில் பக்திப் பெருக்கினால் ஏற்பட்ட நூதன இன்பத்திலும் உற்சாகத்திலும் தனது பசியை அடக்கிக் கொண்டு பழத் துண்டுகளையே உண்ட