பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மாயா விநோதப் பரதேசி னர். அவ்வாறு வேலாயுதம் பிள்ளை முதலியோர் அன்றைய சிவ பூஜையிலேயே தமது பொழுதையும் తామిత్ప్రut செலுத்தி இருந்தனர் ஆதலால், அன்று மன்னார் குடிக்குத் தந்தி அனுப்ப மறந்து போயினர். அன்றைய தினம் மாலையில் பத்திரிகை நிருபர் வந்து தெரிவித்த பிறகே பட்டாபிராம பிள்ளை டெலிபோன் மூலமாய்ப் போலிஸ் ஸ்டேஷனில் இருந்து கோமளேசுவரன் பேட்டையில் முதல் நாள் இரவில் அங்கஹரீனம் நடந்த வரலாற்றைத் தெரிந்து கொண்டு அதை வெளியிட, வேலாயுதம் பிள்ளை முதலியோர் திக்பிரமை யோடு திகைத்துப் போய், தமக்கு ஏற்பட இருந்த பெருத்த அபாயத்தை ஈசன் தடுத்தருளிய வகையை எண்ணி எண்ணிப் பேருவகை பூத்தனராயினும், தமக்குப் பிரதிநிதிகளாக இருந்து அந்தப் பேரிடரை ஏற்றுக் கொண்டவர்களைப் பற்றி, அளவற்ற துயரமும், இரக்கமும் கொண்டு தவித்தனர். அந்தச் செய்தியை வேலைக்காரியின் மூலமாய்க் கேள்வியுற்ற மனோன் மணியம்மாளும் மற்றவர்களைப் போல பெருத்த திகிலும் திகைப்பும் அடைந்தவளாய், "ஆகா! என்ன ஆச்சரியம்! பகைவர்கள் இப்படிப்பட்ட சதியாலோசனையும் செய்வார்களா! இந்த மன்னார் குடியார் இந்த விபத்தில் இருந்து தப்பியது கடவுளின் செயல் என்றே கருத வேண்டுமன்றி வேறல்ல. இவர்கள் உண்மையிலேயே யோக்கியமான மனிதர்கள் ஆதி லாலும், கடவுளிடம் பக்தி உடையவர்கள் ஆதலாலும், இவர் களைக் கடவுள் காப்பாற்றி இந்த அபாயத்தில் இருந்து தப்ப வைத்தார். இவர் பாடிய முதல் பாட்டின் ஆரம்பத்தில், 'கடவுள் இங்கு தான் இருக்கிறார், அங்கு தான் இருக்கிறார் என்று குறிப் பிட்டுச் சொல்ல முடியாத எங்கும் ஒரே ஜோதியாக நிறைந் திருக்கிறார் என்பது உண்மையான விஷயமே. வெள்ளைக்காரர்கள் கடவுள் மனிதருக்குத் தோன்றாத் துணைவராக இருப்பவர் என்று ஒப்புக் கொண்டாலும், அவர் மோகூ லோகத்தில் இருப்பவர் என்று சொல்லுகிறார்கள். நம்மவர் கடவுள் எங்கும் நிறைந்திருக் - கிறார் என்ற கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே ஒரு சிறிய கல்லிலும் அவர் இருப்பதாக மனதால் பாவித்துப் பூஜை செய்கிறார்கள். கடவுள் எங்கும் நிறைந்து