பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 55 மறைந்திருந்து, மனிதர்களைக் காப்பாற்றுகிறார் என்பதை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில், நாம் சகுனங்களிலும் உண்மை இருப்ப தாக ஏன் எண்ணக் கூடாது. கடவுள் நேரில் வந்து எதையும் நமக்குக் காட்டுவதில்லை. ஒரு மனிதர் மூலமாகவோ, அல்லது, - வேறு மிருகம், அல்லது, தோற்றம் முதலியவற்றின் மூலமாகவோ அவர் நமக்குக் குறிப்பறிவிக்கிறார் என்பதை மாத்திரம் நாம் ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இவர்கள் நேற்று இரவு இங்கே வந்ததையும், இன்று சிவபூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுடைய மனதில் உண்டானதையும், இவர் களுக்கு அனுகூலமாக எதிரிகளைச் சேர்ந்த மனிதருள் ஒருவன் நல்ல தருணத்தில் வேறு குற்றத்தைச் செய்து பிடிபட்டு சிறைச்சாலைக்குப் போய், அவ்விடத்தில் ஜெவானிடம் இந்த அபாயத்தை அறிவித்ததையும் எண்ண எண்ண இவர்கள் யோக்கியமான மனிதர்கள் என்பதும், கடவுள் எங்கும் இருந்து நல்லவர்களைக் காப்பாற்றுகிறார் என்பதும், கடவுளைத் தமது வசப்படுத்துவதற்கு நம்மவர்கள் கையாளும் முறையே சுலபமும், ஒழுங்குமான முறைகள் என்பதும் நிச்சயமாகின்றன" என்று மனோன்மணியம்மாள் தனக்குள் பலவாறு வாததர்க்கங்கள் புரிந்து முற்றிலும் புதிய மனுவியாக மாறிப் போயிருந்தாள். அந்தச் சமயத்தில் அவர்களது பங்களாவின் வாசலில் ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. அதற்குள் இருந்து இரண்டு துரைகள் கீழே இறங்கினார்கள். ஒருவர் வெளுப்பு நிறமாய் இருந்த இங்கிலீஷ்கார துரை; மற்றவர் மாநிறமாய் இருந்த நமது நாட்டு சட்டைக்கார துரை. அவரும் மற்றவரைப் போல தொப்பி, சட்டை, நிஜார், பூட்ஸ், மூக்குக்கண்ணாடி முதலிய ஆடம்பரங் களோடு வந்திருந்தார். இங்கிலீஷ்கார துரையைக் கண்ட டலாயத்துகள் குனிந்து அவருக்குச் சலாம் போட்டு, எஜமானர் விருந்தாளிக ளோடு முதல் உப்பரிகையில் இருப்பதாகக் கூறி னார்கள்; அவர்களுள் ஒருவன் உடனே மேலே ஒடி போலீஸ் கமிஷனர் துரையும், இன்னொரு சட்டைக்கார துரையும் வந்திருக்கிறார்கள் என்று பட்டாபிராம பிள்ளையிடம் தெரிவிக்க, அவர்களை உள்ளே அழைத்து வரும்படி கலெக்டர் உத்தரவு செய்தார். அதைக் கேட்டுக் கொண்ட டலாயத்து கீழே வந்து துரைகள்