பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 59 தெளிவுண்டாக்கவே முடியவில்லை. என்னிடம் ஒரு கலிக்கம் இருக்கிறது. அது மிளகாய்ப் பொடியை விட நூறு மடங்கு அதிக காரமாய் இருக்கும். அதில் கொஞ்சம் எடுத்து இரண்டு கண்களிலும் தடவி விட்டால், உடனே பொறிக் கலக்கம் தெளிந்து போகும். அந்தப் பொடியை நான் இதோ கொண்டு வந்திருக்கிறேன். இதை சாதாரணமாக நல்ல நிலைமை யில் இருப்பவர்கள் கண்ணில் போட்டுக் கொண்டால், ஆயிரம் ஊசிகளால் சுருக் சுருக்கென்று குத்துவது போல இருக்கும். பொறிக் கலக்கத்தை இது ஒரு நொடியில் விலக்கிவிடும். ஆனால் இவருக்குக் கொஞ்சமாவது நாடி அடித்துக் கொண்டிருந்தால் இந்த மருந்தை நான் உபயோகிப்பேன்; இவருடைய பிராணன் போய் விட்டது நிச்சயம். இருந்தாலும் பரவாயில்லை. இவருடைய ஆப்த சிநேகிதரான நீர் வந்து இவரோடு பேசப் பிரியப்படுகிறீர். அதைக் கருதி நான் இந்தக் கலிக்கப் பொடியில் கொஞ்சம் இவருடைய கண்களில் போடுகிறேன்" என்று பலமாகக் கூச்சலிட்டுப் பேசிக் கொண்டே, இவர் தம்மிடம் இருந்த சாதாரன மூக்குப் பொடியில் கொஞ்சம் எடுத்து அவனுடைய கண்களிலும் தடவினார். தடவியதில் கண்களில் இருந்து கொஞ்சம் கண்ணிர் வழிந்ததே அன்றி அவன் கொஞ்சமாவது அசையவுமில்லை; அவனுக்கு ஸ்மரணை உண்டானதாகத் தோன்றவுமில்லை. உடனே இவர் மறுபடியும் கூச்சலிட்டுப் பேசத் தொடங்கி "ஐயா! மாசிலாமணிப் பிள்ளை பார்த்தீரா? கண்களில் நான் போட்ட கலிக்கத்தில் ஒரு துளி கண்ணிர்கூட வெளியில் வரவில்லை. இவர் இறந்து போனதற்கு இதை விட வேறே சாட்சியும் வேண்டுமா? சரி! முதலியார் ஐயா! இவரை இனி நாம் அடக்கம் செய்து விடுவோம். பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் ஒரு குழி தோண்டச் சொல்லுங்கள்" என்றார். அதற்குள் முதலியாரும் இவர் செய்யும் தந்திரத்தை அறிந்து கொண்டார் ஆதலால் அவர், "சரி, நான் போய்க் குழி வெட்ட ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லிய வுடன் அவ்விடத்தை விட்டு வெளியில் போயிருந்து கால் நாழிகைக் கெல்லாம் திரும்பி வந்து, "குழி வெட்டியாய் விட்டது. இவரைப் போட்டுப் புதைத்து விடலாம்" என்றார். நோயாளிகளைப் படுக்க வைத்து எடுத்துப் போவதற்கு ஏணி