பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மாயா விநோதப் பரதேசி போல நீளமாய் இருக்கும் படுக்கை ஒன்றையும் அவர் கொண்டு வந்தார். நாங்கள் மூவரும் கோபாலசாமியை ೯®ಕಪ್ಪ ಶ್ಲೆಷ್ಟು படுக்க வைத்து தோட்டத்திற்குள் கொண்டு போய், ಅಥ್ರೂ-ಕು @త్రై ஒரு குழிக்குப் பக்கத்தில் வைத்து அவனைத ಕ. அந்தக் குழிக்குள் படுக்க வைத்தோம். அந்தக் குழி இடுப்பளவு ஆழம் இருந்தது. அவனைக் குழிக்குள் இறக்கிவிட்ட பிறகு இவர் கால் பக்கத்தில் கொஞ்சம் மண்ணைத் தூவியபடி, "சரி; தள்ளுங்கள் மண்ணை நன்றாக மூடிப் புதைத்து விடுவோம். ஐயோ பாவம்! இவருடைய முகத்தைப் பார்க்க எனக்கு நிரம்பவும் பரிதாபகரமாக இருக்கிறது. இவருக்கு வயசு சுமார் இருபத்தைந்து தான் இருக்கலாம். இவருக்குத் தாய் தகப்பன் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இவரைப் பார்த்தவுடனே எனக்கு இன்னொருவனுடைய ஞாபகம் வருகிறது. நேற்று நான் மன்னார்குடிக்குப் போயிருந் தேன். அந்த ஊர் ஆஸ்பத்திரியில் நேற்று ஒருவன் இறந்து போனான். அவனுக்கு வயது இருபதுதான் இருக்குமாம். அவனுடைய அழகை என்னவென்று சொல்லுவேன். அதுவு மன்றி, அவன் அந்த ஊரிலேயே பெருத்த தனவந்தரான வேலா யுதம் பிள்ளை என்பவருடைய இரண்டாவது பிள்ளையாம். அவனுக்கு மாத்திரம் ஒரு கோடி ரூபாய்க்கு ஐவேஜி உண்டாம். அந்தப் பையன் இந்த ஊரில் பி.ஏ. பரீட்சையில் தேறி, பி.எல். பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தானாம். அவன் இந்த ஊரில் கோமளேசுவரன் பேட்டையில் தான் இருந்தானாம். அவன் ஏதோ அபாயத்தில் மாட்டிக் கொண்டு நேற்று திடீரென்று இறந்து போய்விட்டான். அவனை நீங்கள் பார்த்திருந்தால், எப்படி வருத்தப்பட்டிருப்பீர்கள் தெரியுமா?" என்றார். இவர் அவ்விதம் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட உடனே குழிக்குள் கிடந்த கோபாலசாமியின் பிணம், "ஆ" அப்படியா கந்தசாமி இறந்தா போய்விட்டான்' என்று சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்து கொண்டது. அதைக் காண நானும் டாக்டர் முதலியாரும் பிரமிப்படைந்து ஸ்தம்பித்துப் போய் விட்டோம். அப்போதும் இவர் நிதானமாகவே பேசத் தொடங்கி, "சரி, நான் போட்ட கலிக்கப் பொடி வேலை செய்து இவருடைய பொறிக் கலக்கத்தை நிவர்த்தி செய்திருக்கிறது. வாருங்கள், இவரை