பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 61 மறுபடி ஏணியில் வைத்துத் தூக்கிக் கொண்டு போய்ப் படுக்கையில் விடுவோம்" என்றார். உடனே நாங்கள் மூவரும் கோபால சாமியைக் குழியில் இருந்து வெளிப்படுத்தி ஏணியில் படுக்க வைத்து மறுபடி அவனைப் படுக்கைக்கு கொண்டு வந்து சேர்த்தோம். ஆகாரம் இல்லாமையால் அவனுடைய தேகம் களைப்படைந்து போயிருந்தது ஆகையால், அவனுக்கு உடனே ஆகாரம் கொஞ்சம் வரவழைத்துக் கொடுத்தோம். அவன் அதைச் சாப்பிட்டான். கொஞ்ச நேரத்தில் அவனது களை தெளிந்தது. அவன் மன்னார்குடி கந்தசாமிக்கு என்ன அபாயம் நேர்ந்தது என்பதையும், அவன் எப்படி இறந்தான் என்பதையும் அறிய ஆவல் கொண்டவனாய் அதையே பலதடவை கேட்க, நாங்கள் அவனுடைய கேள்விகளுக்குச் சரியான விடை கொடுக்காமல், சனிக்கிழமை அன்று அவனும் இன்னொரு ஸ்திரியும் இந்தப் பங்களாவிற்கு என்ன கருத்தோடு வந்தார்கள் என்பதை உள்ளபடி சொன்னால் கந்தசாமியைப் பற்றிய வரலாற்றை நாங்கள் சொல்லுவோம் என்றோம். கோபாலசாமி உடனே உண்மையைத் தெரிவித்தான். தனக்குச் சம்சாரமாகப் போகிற மனோன்மணியம்மாளை நேரில் பார்த்து, அவளது தோற்றத் தையும் குணாதிசயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கந்தசாமியே பெண் வேஷம் போட்டுக் கொண்டான் என்றும், தாங்கள் இருவரும் மன்னார்குடி வேலாயுதம் பிள்ளை யின் மைத்துனியும், மைத்துணி புருஷனும் என்று சொல்லிக் கொண்டு வந்ததாயும், வந்த இடத்தில் நடந்த மற்ற வரலாற்றை யும் தெரிவித்தான். அன்றைய இரவில் முரட்டு ஆள்கள் வந்து அடித்த காலத்தில் அவனுக்கு உண்மையில் கொஞ்சமே காயம் பட்டதாம். அதனால், அவனுக்கு மறுநாள் பகல் வரையில் மூளை கலக்கமாக இருந்து, உடனே தெளிவு அடைந்து போய்விட்டதாம். ஆனாலும், கந்தசாமிக்கு என்ன நேர்ந்தது என்பதையும், அவன் எவ்விதமான தகவலை வெளியிட்டிருக்கிறான் என்பதையும் தெரிந்து கொள்ளாமல், தான் உண்மையை வெளியிட்டால், அது அவனுக்கு அவமானமாக முடியும் என்று நினைத்து, அவன் ஸ்மரணை தெளியாதவன் போலவே பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தானாம். ஆகாரம் உட்கொண்டால், டாக்டர்கள் தனது