பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மாயா விநோதப் பரதேசி பதறுகிறதே! என் உயிர் தள்ளாடுகிறதே! மூளை சுழலுகிறதே! அவர் வந்து என்னை துஷித்துச் சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவ்வளவுக்கவ்வளவு இப்போது அழகாய்த் தோன்றுகிறதே! அவர் வந்து ஒரு கூடிணத்தில் என் உயிரையும் மனசையும் கொள்ளை கொண்டு போய் விட்டாரே! என்னுடைய நடையுடை பாவனைகளைக் கண்டு அவர் என்மேல் அருவருப்புக் கொண்டு போயிருப்பாரோ! என்னை அவர் கட்டமாட்டேன் என்று மறுத்து விடுவாரோ! அவரால் வெறுக்கப்பட்ட நடையுடை பாவனை களை எல்லாம் நான் இந்த நிமிஷமே விலக்கத் தயார். என்னிடம் உள்ள இங்கிலீஷ் புத்தகங்களை எல்லாம் நான் இப்போதே நெருப்பில் போட்டுக் கொளுத்தி விடுகிறேன். இனி அவரும் அவரைச் சேர்ந்த மற்றவரும் காலால் இடுவதைத் தலையால் செய்து அடிமையிலும் அடிமையாக நடக்க நான் என் முழு மனதோடு சம்மதிக்கிறேன். நான் அவரிடம் தவறாக நடந்து அவரிடம் அபராதியானதை மாத்திரம் அவர் மறந்துவிட வேண்டும். ஈசா அதற்கு நீதான் துணை செய்ய வேண்டும். இனி நான் உன் அடைக்கலம். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்திருக்கும் பரதேவதையான உன்னை இனி நானும் அஞ்சலி செய்கிறேன்" என்று தனக்குத்தானே எண்ணமிட்டு அன்றைய இரவு முழுதும் தூங்காமல் படுக்கையில் புரண்டு புரண்டு புழுங்கித் தவித்திருந்தாள். ★ 女 ★ 13-வது அதிகாரம் மொட்டைத்தலைக்கேற்ற பட்டுக்குல்லா நிச்சயதார்த்தத்திற்காகக் குறிக்கப்பட்டிருந்த தினமாகிய வெள்ளிக் கிழமை இரவு கோமளேசுவரன் பேட்டையில் ரமாமணியம்மாள் முதலியோரை அங்கஹமீனப் படுத்திவிட்டு ஓடிவந்தவர்களான இடும்பன் சேர்வைகாரனது ஆட்களுள் பதினாறு மனிதர்கள் பிடிபட்டுப் போயினர். அவர்கள் எல்லோரையும் போலீசார் உடனே அழைத்துப் போய் விசாரணைக் கைதிகளை அடைத்து வைக்கும் சப் ஜெயிலில் பந்தோபஸ்தாக அடைத்து வைத்தனர்.