பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 65 அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்தால், அவர்கள் தமக்குள் கலந்து பேசி கட்டுப்பாடாக ஒரே விதமான தகவலைத் தெரிவிப்பார்கள் என்ற நினைவினால், போலீசார் அவர்களைத் தனித்தனியாகப் பிரித்துப் பதினாறு அறைகளில் வைத்ததன்றி, அவர்கள் எல்லோரையும் வரிசையாக நிறுத்தி போட்டோ படமும் பிடித்து வைத்துக் கொண்டனர். போலீஸ் சப் இன்ஸ்டெக்டர் அவர்களை ஒவ்வொருவராக வரவழைத்து ரகசியமாக வைத்துக் கொண்டு உண்மையை வெளியிடும்படி கேட்க, அவர்கள் எல்லோரும் ஒரேவிதமான தகவலையே தெரிவித்தனர். தாங்கள் சந்தைகள், கடைகள், ரயிலடி முதலிய இடங்களில் நின்று மூட்டைகள் எடுத்து வேலை செய்யும் கூலியாள்கள் என்றும், அந்த இரவில் தாங்கள் தங்கள் வழக்கப்படி கோமளேசுவரன் பேட்டையில் வீட்டுத் திண்ணைகளில் மூலைக் கொருவராய்ப் படுத்திருந்த காலத்தில் அவ்விடத்தில் உண்டான பெருத்த கூக்குரலைக் கேட்டுத் தாங்கள் திடுக்கிட்டு விழித்து எழுந்து ஓடிவந்ததாயும், கலியான வீட்டில் திருடர்கள் புகுந்து அடித்து விட்டு ஓடியதைக் கண்டு பயந்து, தாங்களும் அவர்களைச் சேர்ந்தவர்கள் என்று ஜனங்கள் எண்ணிவிடப் போகிறார்களே என்று நினைத்து அஞ்சி ஓடியதாகவும், அந்த சமயத்தில் தம்மைப் போலீசார் பிடித்துக் கொண்டதாகவும் உண்மையில் தாங்கள் எவ்வித குற்றமும் செய்யாத நிரபராதிகள் என்றும் அழுத்தந் திருத்தமாகக் கூறினர். அந்தப் பதினாறு மனிதர்களும் தமக்குள் ஒருவரை ஒருவர் அப்போதைக்கப்போது பார்த்திருக்கலாம் ஆயினும், ஒருவருக்கொருவர் உறவாவது, சிநேகமாவது, பரிச்சயமாவது இல்லை என்றும் அவர்கள் கூறினர். அவர்கள் சென்னைக்கு வரும் முன்னரே இடும்பன் சேர்வை காரன் அவர்களுக்கு நன்றாகப் பாடம் ஏற்றி வைத்திருந்தான் ஆதலால், போலீசார் எவ்வளவோ நயமாகவும், பயமுறுத்தியும், வற்புறுத்தியும் கேட்டும், உண்மையை அவர்களிடத்தில் இருந்து கிரகிக்க எத்தனித்ததெல்லாம் வீணாய் முடிந்தது. "என்னை நீங்கள் கொன்றாலும் கொல்லுங்கள். நான் யாதொரு பாவத்தையும் அறியேன். நான் திருடவுமில்லை; யாருக்கும் எவ்வித கெடுதலும் செய்யவில்லை" என்று ஒவ்வொருவனும் கடைசி வரையில் ஒரே torr. sál.LI.RII–5 .۶