பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மாயா விநோதப் பரதேசி சாதனையாய்ச் சாதித்துவிடவே, போலீசார் அவர்கள் சொல்வது ஒருகால் உண்மையாய் இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கொள்ளத் தொடங்கி, அவர்கள் தான் உண்மையான குற்ற வாளிகளா என்பதை தாம் வேறு சாட்சிகளின் மூலமாகவே ரு.ஜூப்படுத்த வேண்டும் என்று நினைத்து ரமாமணியம்மாள் முதலியோர் செளக்கியம் அடைந்து சரியான நிலைமைக்கு எப்போது வருவார்கள் என்று நிரம்பவும் ஆவலோடு எதிர்பார்த் திருந்தனர். ரமாமணியம்மாள், அவளது தாய், தந்தை, பக்கிரியா பிள்ளை, போயி ஆகிய ஐவரும் சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் ஒரு பிரத்தியேகமான கூடத்தில் ஐந்து கட்டில்களின் மீது படுத்திருந் தனர். அக்கினித் திராவகம் கொட்டப்பட்டதனால் பக்கிரியா பிள்ளையின் முகம் முழுதும் வெந்து புண்பட்டுப் போயிருந்தமை யால், கழுத்திற்கும் மேல்பட்ட பாகம் எல்லாம் மருந்து பூசப் பட்டிருந்தது. ரமாமணியம்மாளின் மூக்கிலும், போயியின் கண்களிலும், மற்ற இருவரது காதுகளிலும் மருந்துகள் வைத்து பெரிய துணிக்கட்டுகள் போட்டிருந்தார்கள் ஆதலால், வீக்கத்தி னாலும் துணிக்கட்டுகளினாலும் அவர்களது முகங்கள் பார்வைக்கு நிரம்பவும் பயங்கரமாகத் தோன்றின. ரமாமணியம்மாளின் மீது காணப்பட்ட விலையுயர்ந்த ஆடையாபரணங்களைக் கொண்டும், அவர்களது சாத்வீகத் தோற்றத்தைக் கொண்டும், அவர்கள் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாய் இருக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிர்பாராத பெரிய இடர் நேர்ந்து விட்ட தென்றும் போலீசாரும், ஆஸ்பத்திரியில் உள்ளவர்களும் நினைத்து, அவர்களது விஷயத்தில் அளவற்ற அனுதாபமும் இரக்கமும் விசனமும் உருக்கமும் காண்பித்து, அவர்களை மிகுந்த அன்போடும் பச்சாதாபத்தோடும் நடத்தி, அவர்களது வேதனைகளையும் சிகிச்சைகளையும் நிரம்பவும் கவனிப்பாகச் செய்து வந்தனர். ஆரம்பத்தில் அவர்கள் முற்றிலும் ஸ்மரணை இன்றி, பிணங்கள் போலக் கிடந்த காலத்தில், அவர்கள் எல்லோரையும் ஒன்றாக வைத்துப் போலீசார் போட்டோப் படம் எடுத்து வைத்துக் கொண்டனர். ஏனெனில், அவர்கள் பிழைக்காமல் இறந்து போவார்களாகில், அவர்கள் இன்னார்