பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 67 என்பதை அறிந்து கொள்வதற்கு அனுகூலமாய் இருக்கும் என்று அவர்கள் அவ்வாறு படம் பிடித்து வைத்துக் கொண்டனர். அந்த முரட்டு ஆள்களைக் கொண்டு வேலாயுதம் பிள்ளை வீட்டாரை மூளிபடுத்தும் பொருட்டு, ரமாமணியம்மாள் முதலியோர் வந்தவர்கள் என்பதைப்பற்றி போலீசாரும் மற்றவரும் சிறிதும் சந்தேகங் கொள்ளவில்லை ஆதலால், அவர்கள் ஐவரையும் தனித் தனியான இடத்தில் பிரித்து வைக்க வேண்டும் என்பதை எண்ணாது ஒரே கூடத்தில் பக்கம் பக்கமாகப் போடப்பட்டிருந்த கட்டில்களில் படுக்க வைத்திருந்தனர். மறுநாளாகிய சனிக்கிழமை பகல் முழுதும் அவர்கள் எல்லோரும் வாய் திறந்து பேச இயலாத நிலைமையில் கிடந்தனர். அக்கினித் திராவகத்தின் எரிச்சலைத் தாங்க மாட்டாமல் புழுவைப் போலத் துடிதுடித்திருந்த பக்கிரியா பிள்ளை அன்றைய தினம் மாலையில் தாங்கள் இன்னார் என்ற விவரத்தை மாத்திரம் வெளியிட்டானே அன்றி, மற்ற விவரம் எதையும் தெரிவிக்காமல் நரகவேதனை அனுபவித்திருந்தான். சனிக்கிழமை இரவில் மற்ற எல்லோரும் சிறுகச் சிறுக தெளி வடையத் தொடங்கி தங்களுக்கு நேரிட்ட பேரிடரையும் தாங்கள் இருந்த நிலைமையையும் உணரத் தொடங்கினர். இடும்பன் சேர்வைகாரனது ஆட்கள் தங்களை வேலாயுதம் பிள்ளை முதலியோர் என்று ஆள்மாறாட்டமாக எண்ணி அவ்வாறு அங்கஹறினப்படுத்தி விட்டார்கள் என்பதும் அவர்களுக்கு எளிதில் விளங்கி விட்டது. இனி தாம் தமது ஆயுள்காலம் முழுதும் வெளியில் தலைகாட்டாமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண் டியதான பெருத்த அவகேட்டை அந்த மனிதர்கள் தங்களுக்கு உண்டாக்கி விட்டார்களே என்பதை எண்ண எண்ண அவர்களது மனம் கட்டிலடங்காமல் கொதித்து அந்த ஆட்களின் மீது மிகுந்த ஆத்திரங் கொண்டதானாலும், அவர்கள் வேண்டும் என்று அவ்வாறு தங்களுக்குக் கெடுதல் செய்யவில்லை என்ற எண்ணம் அடிக்கடி தோன்றியது ஆகையால், அவர்கள் தங்களைத் தாங்களே நொந்து கொண்டனர். அந்த ஆட்களைப் போலீசாரிடம் காட்டிக் கொடுத்து அவர்களைத் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்ற ஆக்கிரோஷம் அவர்களது மனதில் எழுந் தெழுந்து துடித்தது. ஆனாலும், அவனால் மாசிலாமணிக்கும்,