பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மாயா விநோதப் பரதேசி போலிஸ் இன்ஸ்பெக்டர் ஆஸ்பத்திரியை விடுத்துச் சென்ற பிறகு இரண்டு நாழிகை காலம் கழிந்தது. நமது நீர்மேல்குமிழி நீலலோசனியம்மாள் மடிசஞ்சியும் கையுமாக ஆஸ்பத்திரிக்குள் வந்து சேர்ந்தாள். அவளது முகம் நிரம்பவும் விசனகரமாகவும் வாட்டமடைந்தும் இருந்தது. தேகம் பதறித் துடிதுடித்தது. கண் களில் இருந்து கண்ணி அருவி போலக் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது. அத்தகைய பரிதாபகரமான நிலைமையில் வந்து தோன்றிய நீலலோசனியம்மாள் ரமாமணியம்மாள் முதலி யோர் இருந்த கூடத்திற்குள் விரைவாக நுழைந்து, "விசாலாகூ யம்மா! குழந்தாய் ரமாமணி! நீங்கள இங்கே படுத்திருக்கிறீர்கள் ஐயோ என்ன கொடுமை என்ன கொடுமை ஆகா! உங்களைப் பார்க்க என் இருதயம் வெடித்துப் போய் விடும் போல இருக்கிற தே! ஐயோ! உங்களுக்கு என்ன காலம் வந்ததோ! ஆகா! அந்தப் போலீஸ் ஜெவான் சொன்னதைக் கேட்ட போது, அது சுத்தப் பொய் என்றல்லவா நான் நினைத்தேன். அவன் சொன்னது போலவே காரியம் நடந்திருக்கிறதே! எப்பேர்ப்பட்ட வேளையில் நீங்கள் அந்தச் சத்திரத்தை விட்டுப் புறப்பட்டீர்களோ தெரிய வில்லையே ஆகா அந்தத் திருடர்கள் உங்களை எப்பேர்ப் பட்ட கொடுமைக்கு ஆளாக்கி விட்டார்கள். அவர்களுடைய தலையில் இன்னமும் இடிவிழவில்லை. இவ்விதமான அட்டுழியத்தைப் பார்த்துக் கொண்டு கோவிலில் உள்ள தெய்வங்கள் எல்லாம் சும்மா இருக்கின்றனவே! அட பாவிகளா! சண்டாள துரோகிகளா! இப்படியும் செய்ய உங்கள் மனம் எப்படித் துணிந்ததோ! உங்களுடைய கைகள் தான் கூசாமல் இந்த அக்கிரமத்தை எப்படிச் செய்தனவோ! படுபாவிகள் படுபாவிகள்!" என்று கூறி நிரம்பவும் உருகித் தவித்துக் கண்ணிரை ஆறாய்ப் பெருக்கி ஒலமிட்டமு, அவ்விடத்தில் இருந்த வைத்தியசாலைச் சிப்பந்திகள், "உஸ், உஸ், யாரம்மா அது? ஏனம்மா இப்படிக் கூச்சலிட்டு நோயாளிகளை அலட்டுகிறாய்? உன்னைப் பார்த்து இவர்களும் அழுது உடம்பைக் கெடுத்துக் கொள்ளப் போகிறார்கள். சும்மா சாதாரணமாகவே பேசிவிட்டு சீக்கிரம் வெளியில் போ அம்மா" என்று அதட்டிக் கூறினர். அதைக் கேட்ட நீலலோசனியம்மாள் சிறிது சாந்தமடைந்தவளாய், "அப்படியே ஆகட்டும், ஐயா!