பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 71 இப்பேர்ப்பட்ட அக்கிரமக் காட்சியைக் காண, என் மனசுக்குத் தாளவில்லை. அதனால் அழுது விட்டேனப்பா. கோபித்துக் கொள்ளாதேயுங்கள். நீங்கள் சொல்வது உண்மைதான். நான் மெதுவாகவே இவர்களிடம் பேசுகிறேன்" என்று சமாதானமாக மறுமொழி கூறி அவர்களை அடக்கி அப்பால் அனுப்பிவிட்டு, விசாலாகூஜியம்மாளிருந்த கட்டிலண்டை போய் அவளது முகத்தையும் உடம்பையும் மிகுந்த வாத்சல்யத்தோடு தடவிக் கொடுத்து, "அம்மா இந்தக் கோலத்தை அடையவா அன்று நீங்கள் சத்திரத்தை விட்டுப் போனிர்கள்!" என்று தழுதழுத்த குரலில் கூறினாள். தங்களுக்கு அத்தகைய அபாயம் நேர்ந்ததென்பது நீலலோசனி யம்மாளுக்குத் தெரிந்திருக்காதென்றும் அது தெரிந்தாலும், அவள் தங்களைப் பார்க்க விரும்பமாட்டாள் என்றும் அவர்கள் நினைத்திருந்தார்கள் ஆதலால், அதற்கு மாறாக, அவள் வந்ததைக் கண்டு எல்லோரும் திடுக்கிட்டு மிகுந்த வெட்கமும் கிலேசமும் அடைந்து குன்றிப் போய் எவ்விதமாக அவளிடம் பேசுவதென் பதை உணராது தத்தளித்தனர். ஆயினும் அந்த அம்மாள் கூறிய அனுதாப மொழிகளைக் கேட்டு, அவள் காட்டிய உள்ளார்ந்த உருக்கத்தையும் அபிமானத்தையும் உணர, அவர்களது மனம் ஒரு விதமான துணிவை அடைந்தது. அந்த அம்மாள் தங்களிடம் வைத்த பிரியமும் மதிப்பும் குறையவில்லை என்றும், அவை முன்னிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன என்றும் அவர்கள் எளிதில் உணர்ந்து கொண்டனர். தங்களுக்கு நேர்ந்த அந்த எதிர் பாராத அவகேட்டினால், தாங்கள் அந்த அம்மாளிடத்திலிருந்து அபகரிக்க எண்ணிய ஐந்து லக்ஷம் ரூபாய் தங்களுக்கு இல்லாமல் போய் விட்டதே என்று ரமாமணியம்மாள் அதற்கு முன் நினைத்து விட்டாளானாலும், அவளை மறுபடி கண்டு அவளது மனநிலை மையை உணரவே, பழைய துர்நினைவும் சதியாலோசனையும் திரும்பவும் ரமாமணியம்மாளின் மனதில் தலையெடுக்கத் தொடங்கின. அவள் நீலலோசனியம்மாளுக்குத் தெரியாதபடி தனது தாயை நோக்கிக் கண் ஜாடை காட்டினாள். அதன் உள் கருத்தை உணர்ந்து கொண்ட விசாலாகூஜியம்மாள், "அம்மா! எங்களுக்கு நேரிட்ட இந்தக் கொடுமையை என்னவென்று சொல்