பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மாயா விநோதப் பரதேசி வேன் கோமளேசுவரன் பேட்டையில் எங்களுக்குத் தெரிந்த சில மனிதரைப் பார்ப்பதற்காக நாங்கள் வெள்ளிக்கிழமை மாலையில் போனோமல்லவா? போன இடத்தில் அகால வேளை ஆகி விட்டது. திரும்பி ராமசாமி முதலியார் சத்திரத்திற்கு வருவதைவிட அவ்விடத்திலேயே படுத்திருந்து மறுநாள் காலையில் எழுந்து வரலாம் என்று நினைத்து அங்கேயே படுத்துத் துங்கினோம். நடு இரவில் திருடர்கள் உள்ளே புகுந்து ஆள்மாறாட்டமாய் எங்கள் மேல் பாய்ந்து இவ்விதமான கொடுமையை நடத்தி விட்டார் களம்மா. நாங்கள் இனி என்ன செய்யப் போகிறோம்! இவ்வித விகாரத் தோற்றத்தோடு நாங்கள் இனி எங்கள் ஊருக்கு எப்படிப் போகிறது? எல்லா மனிதருடைய முகத்திலும் எப்படி விழிக்கி றது? நாங்கள் இனி உயிரை வைத்துக் கொண்டிருப்பதை விட இந்த ஆஸ்பத்திரியிலேயே இறந்து விடுவது சிலாக்கியம் எனத் தோன்றுகிறது. மறுபடி நாங்கள் உங்களைப் பார்க்கப் போகி றோமா என்று நாங்கள் சந்தேகித்திருந்தோம். ஏதோ மலையல் வளவு பாவத்தில் நாங்கள் கடுகள்வளவு புண்ணியம் செய்திருந் தோம் போலிருக்கிறது. உங்களுடைய மாறாத பிரியமும் சிநேக மும் எங்களுக்கு இன்னமும் இருக்கின்றன" என்றாள். அதைக் கேட்ட நீலலோசனியம்மாள் முன்னிலும் பன்மடங்கு அதிக மன இளக்கமும் கண் கலக்கமும் காட்டி நிரம்பவும் உருக்கமாகப் பேசத்தொடங்கி, "அம்மா! இப்பேர்ப்பட்ட மகா துக்ககரமான நிலைமையில் உங்களுக்கு நான் எவ்விதமான ஆறுதலைச் சொல்வதென்பதே தெரியவில்லை. உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அற்பசொற்பான நஷ்டமல்ல. ஏதாவது பணம் போயிருந்தால் அதை ஒன்றுக்குப் பத்தாக மறுபடி உண்டாக்கிக் கொள்ள முடியாததாகவும், உங்கள் ஆயிசுகால பரியந்தம் நீடித்திருக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க, என் துக்கம் ஆறமாட்டேன் என்கிறது. ஏதோ நான் உங்களைக் கண்டு உங்களோடு பழகியது சொற்ப காலமாய் இருந்தாலும், என்னுடைய முழுப்பிரியத்தையும் என்றைக்கும் மாறாதபடி நீங்கள் கவர்ந்து கொண்டீர்கள். நீங்கள் நல்ல நிலைமையில் இருந்தால், நான் உங்களை விட்டுப் போயிருந்தால் கூட, அது ஒரு பொருட்டாகாது. உங்களுக்கு நேர்ந்துள்ள இந்த