பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 73 மகா விபரீதமான துன்ப சமயத்தில் நான் உங்களை விட்டுப் போனால், என்னைப் போல மகா சண்டாள குணம் படைத்தவள் வேறே யாரும் இருக்கமாட்டாள். நேற்று முழுதும் நீங்கள் வருவீர்கள் வருவீர்களென்று பார்த்தபடி நான் சத்திரத்திலேயே இருந்தேன். நேற்று காலையிலேயே வந்து விடுவதாகச் சொன்ன வர்கள் வராமற் போகவே, என் மனம் பலவிதமான சந்தேகங் களைக் கொண்டு தவித்தது. இன்று காலையில் சத்திரத்தில் ஜனங்கள் கூடிக் கூடிப் பேசிக் கொண்டதைக் கண்டு ஏதோ விசேஷ சம்பவம் நடந்திருக்கிறதென்று நினைத்து நான் விசாரித்த தில், உங்களுக்கு இவ்விதமான விபத்து நேர்ந்து விட்டதென்றும், நீங்கள் எல்லோரும் இங்கே இருக்கிறீர்கள் என்றும் ஜனங்கள் சொன்னார்கள். உடனே நான் புறப்பட்டு இங்கே ஓடிவந்தேன். ஆனால், உங்களுடைய உயிருக்கு எவ்வித அபாயமும் இல்லை என்றும் 20 தினங்களில் காயம் ஆறிப் போகும் என்றும் டாக்டர் சொன்னார். அது ஒருவிதத்தில் ஆறுதலாக இருந்தது ஆனாலும், சாசுவதமாக உங்களுக்கு ஒவ்வோர் அங்கம் போய்விட்ட தொன்றே ஆறாத்துயரத்தை உண்டாக்குகிறது. உண்மையான சிநேகிதர்கள் அபாய காலத்தில் கைவிட மாட்டார்கள். அப்படிக் கைவிட்டால், அவர்கள் போலி சிநேகிதர்கள் தான். ஆகவே, நான் உங்களிடம் வைத்த சிநேகமும், பிரியமும் உண்மையானவை என்பதை இந்தச் சமயத்தில் தான் காட்ட வேண்டும் என்பது என் னுடைய உறுதியான தீர்மானம். இந்த நிமிஷம் முதல் என் னுடைய உடல் பொருள் ஆவியாகிய எல்லாவற்றையும் நான் உங்களுக்கே சொந்தமாக்கி விட்டேன். என்னால் உங்களுக்கு என்ன உதவி தேவையானாலும் நான் செய்யக் காத்திருக்கிறேன். என் மனசில் இன்னொரு யோசனையும் தோன்றுகிறது. அன்றைய தினம் சந்தோஷமாகவும் கூேடிமமாகவும் இருந்த நீங்கள் இன்று இப்படிப்பட்ட மகா துக்ககரமான நிலைமையில் இருப்பதை எண்ண எண்ண, மனிதனுடைய வாழ்வு நிலையற்ற தாகத் தோன்றுகிறது. இந்த நிமிஷத்தில் இருக்கும் நிலைமை அடுத்த நிமிஷத்தில் எப்படி மாறிப் போகுமோ தெரியவில்லை. எந்த நிமிஷத்திலாவது எனக்கும் ஏதாவது அபாயம் நேர்ந்து விடுமோ என்ற கவலையும், அச்சமும் என் மனசில் உண்டாகிக்