பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மாயா விநோதப் பரதேசி கொண்டே இருக்கின்றன. ஆகையால், நான் செய்ய எண்ணி யுள்ள ஏற்பாடுகளை எல்லாம் இப்போதே திட்டமாகச் செய்து வைத்துவிடத் தீர்மானித்திருக்கிறேன். அதாவது, முக்கியமாக எங்கள் ஊர் செட்டியாரிடம் நான் போட்டு வைத்திருக்கும் ஐந்து லட்சம் ரூபாயைப் பற்றிய விஷயமே. நான் இனி என் ஆயிசுகால பரியந்தம் கும்பகோணத்தில் உங்கள் வீட்டில் இருக்கிறதென்றும், என்னை நீங்கள் கடைசி வரையில் சவரகூஜிக்கிறதென்றும், நான் இறந்து போனவுடன் எனக்குரிய அந்தியகாலக் கிரியைகளை நீங்கள் செய்கிறதென்றும், அந்த ஐந்து லட்சம் ரூபாயையும் இன்னும் என் கைவசத்திலிருக்கும் சொத்தையும் ரமாமணி யம்மாளும், அவளுடைய புருஷனும் எடுத்துக் கொள்ளுகிற தென்றும், இன்றைய தினமே ஒரு பத்திரம் எழுதி அதை ரிஜிஸ்டர் செய்ய உத்தேசிக்கிறேன். அந்த ஏற்பாட்டை நீங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன். பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்ய நீங்கள் சப்-ரிஜிஸ்டிரார் கச்சேரிக்கு வரமுடியாதாகையால், பத்து ரூபாய் பணம் கட்டி அவரை இவ் விடத்திற்கே அழைத்துக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று நிரம்பவும் உருக்கமாகக் கூறினாள். அதைக் கேட்ட ரமாமணியம்மாள் முதலியோர் பருத்தி புடவை யாகவே காய்த்ததென்று நினைத்து, அளவற்ற மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்து ஆனந்தக் கடலில் ஆழ்ந்து போயினர். ரமாமணியம்மாளுக்கு மூக்கில் கட்டுப் போடப்பட்டிருந்தது பற்றி, அவள் தனது வாயைத் திறந்து நீலலோசனியம்மாளுடன் அதிகமாக சம்பாவிக்க இயலாமல் இருந்தது. விசாலாகூரி யம்மாளும், அவளது கணவனும் நீலலோசனியம்மாளுக்குப் பல உபசார மொழிகள் கூறி, அந்த அம்மாள் தங்களுக்குப் பொருள் கொடுத்தாலும், கொடாவிட்டாலும், தாம் அவளைக் கடைசி வரையில் கைவிடமாட்டோம் என்று பிரமான பூர்வமாக வாக்களித்தனர். அதன் பிறகு நீலலோசனியம்மாள் அவர்களோடு அரை நாழிகைக் காலம் சம்பாஷித்த பின்னர் செலவு பெற்றுக் கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டாள். சென்றவள் அன்றைய