பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 75 தினம் பகல் ஒரு மணிக்கு மறுபடி அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தாள். அவளுடன் கூட சப்-ரிஜிஸ்டிரார் ஒருவரும் வந்தார். பத்திரம் பதிவு செய்வதற்குரிய உபகரணங்கள் அடங்கிய ஒரு கைப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு அவர்களோடு ஒரு சேவகனும் வந்து சேர்ந்தான். நீலலோசனியம்மாள் தனது வாக்குறுதியை அப்போதே நிறைவேற்றப் போவதைக் கண்டு ரமாமணியம்மாள் முதலியோர் மிகுந்த மனவெழுச்சியும் பூரிப்பும் அடைந்து மெய்ம்மறந்து போயினர். உடனே நீலலோசனி யம்மாள் தனது கையில் வைத்திருந்த பத்திரத்தை சப்-ரிஜிஸ்டி ராரிடம் கொடுத்து, "ஐயா! இது ஒர் உடன்படிக்கைப் பத்திரம்; என் ஆயிசுகால பரியந்தம் இவர்கள் என்னை வைத்து சவரகழிக்க வேண்டியதென்றும், எங்கள் ஊரில் நான் ரொக்கமாக ஒரு செட்டியாரிடம் வட்டிக்குக் கொடுத்திருக்கும் ஐந்து லட்ச ரூபாயையும், என் கையில் எவ்வளவு சொத்து மிச்சப்படுகிறதோ அதையும் இவர்கள் எடுத்துக் கொண்டு என் அந்தியக் கிரியை களை நடத்துகிறதென்றும் இதில் எழுதி இருக்கிறேன். இதைப் பதிவு செய்ய வேண்டும்" என்றாள். அதைக் கேட்ட சப் ரிஜிஸ்டிரார், "ஒகோ! அப்படியா! சரி; இங்கே ஐந்து பேர் இருக்கிறார்களே. இந்த ஐந்து பேரும் நீங்களுமாகத் தானே ஒப்பந்தம் செய்து கொள்ளுகிறீர்கள்?" என்றார். நீலலோசனியம்மாள், "இல்லை; இல்லை. இந்த ஐந்து பேரில் ஒருவன் வேலைக்காரன். அவனைவிட்டு மற்ற நால்வரையும் சேர்த்து எழுதி இருக்கிறேன். அதோ இருக்கும் பெரியவர் தான் வீட்டின் தலைவர். அவர் ஒன்று; அவருடைய சம்சாரமாகிய விசாலாகூஜியம்மாள் இரண்டு; அவர்களுடைய பெண் ரமாமணி யம்மாள் மூன்று; அந்தப் பெண்ணின் புருஷர் பக்கிரியா பிள்ளை என்பவர் நான்கு. ஆக நால்வரும் நானும் சேர்ந்து ஒப்பந்தம் செய்து கொள்வதாக எழுதி இருக்கிறேன்" என்றாள். உடனே சப் ரிஜிஸ்டிரார் அந்தப் பத்திரத்தை எடுத்துத் தமக்குள் ஒருதரம் படித்துப் பார்த்து, அது ஒழுங்காக எழுதப்பட்டிருக்கிறதா என்பதை நிச்சயித்துக் கொண்டபின், அதை மற்ற எல்லோரும் கேட்கும்படி ஒருதரம் படித்துக் காட்டி, "நான் படித்ததைக்