பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மாயா விநோதப் பரதேசி கேட்டீர்களே; இது உங்களுக்குச் சம்மதந்தானா? இதைப் பதிவு செய்து கொள்ளலாமா?" என்று வினவினார். ரமாமணியம்மாள் முதலியோருக்கு அந்தப் பத்திரத்தில் எழுதப்பட்டிருந்த எல்லா விஷயமும் திருப்திகரமாகத் தோன்றியதானாலும் பக்கிரியா பிள்ளையை ரமாமணியம்மாளின் புருஷன் என்று குறித்திருந்தது உசிதமாகப் படவில்லை. ஆயினும், தாங்கள் நீலலோசனியம் மாளிடம் அவ்விதம் கூறியிருந்தமையால், அந்தச் சந்தர்ப்பத்தில், அதைத் தாம் மறுத்தால், அந்த அம்மாள் உடனே சந்தேகங் கொண்டு பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்ய வேண்டாம் சொல்லி விடு வாளோ என்ற அச்சத்தினால் அவர்கள் எவ்வித ஆட்சேப னையும் கூறாமல், அதை அப்படியே ஒப்புக் கொண்டனர். உடனே சப் ரிஜிஸ்டிரார் அவர்கள் ஐவரது கையெழுத்துக் களையும், விரல் ரேகை அடையாளங்களையும் பத்திரத்தில் பெற்று அதைப் பதிவு செய்த பின் தமது சேவகனோடு அவ் விடத்தை விட்டுப் போய்விட்டார். அந்த முக்கியமான ஏற்பாடு எவ்விதமான இடையூறுமின்றி அவ்வளவு துரிதத்தில் நிறை வேறிப் போனதுபற்றி, நீலலோசனியம்மாளும் மற்ற நால்வரும் மிகுந்த களிப்புடன் சம்பாஷித்திருந்தனர். நோயாளிகளை அதிக மாய் அலட்டுவது கூடாதென்று டாக்டர்கள் செய்தி சொல்லி அனுப்பினாராதலால், நீலலோசனியம்மாள் தான் மறுபடி மாலையில் வந்து பார்ப்பதாகக் கூறிவிட்டு அவர்களிடம் செலவு பெற்றுக்கொண்டு அவ்விடத்தை விட்டுப் போய் விட்டாள். அன்றைய பகற்பொழுது கழிந்தது. மாலை ஐந்தரை மணி சமயத்தில், மறுபடி நீலலோசனியம்மாள் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தாள். சப் ரிஜிஸ்டிரார் பதிவு செய்த பத்திரம் அவளிடம் இருந்தது. அதோடுகூட ரமாமணியம்மாள் முதலியோருக்குக் கொடுப்பதற்கு ஒரு நகலும் தயார் செய்யப்பட்டு வந்திருந்தது. அந்த நகலை நீலலோசனியம்மாள் விசாலாகூஜியம்மாளிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி கூறிய பின், "அம்மா இன்று மத்தியானம் நான் இங்கே இருந்து போன பிறகு போலிஸ் சேவகர் ஒருவர் என்னிடம் வந்தார். இன்னம் இரண் டொரு தினங்களில், அந்த இடும்பன் சேர்வைகாரனுடைய வழக்கு