பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மாயா விநோதப் பரதேசி அந்த யோசனையைக் கேட்ட ரமாமணியம்மாள் முதலியோர் மிகுந்த சந்தோஷமடைந்து, அது நிரம்பவும் உசிதமான யோசனை என்று ஒப்புக் கொண்டனர். நீலலோசனியம்மாள் சிறிது சிந்தனை செய்து, "சரி, அப்படியே செய்து விடுகிறேன். இன்று என் உடம்பு சரியான நிலைமையில் இல்லை. இன்று இரவு மாத்திரம் நான் இந்த ஊரில் தங்கி, நாளைய தினம் பகல் வண்டியில் ஏறி, அரக்கோணம், காட்பாடி வழியாகத் திருவண்ணாமலைக்குப் போய்விட்டு கும்பகோணம் போய்ச் சேருகிறேன். உங்கள் நண்பரான மாசிலாமணிப் பிள்ளைக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுதிக் கொடுங்கள். உங்களுக்கும் எனக்கும் சிநேகமான விதத்தையும், இடும்பன் சேர்வைகாரருக்கு ஏற்பட்ட உபத்திரவத்தையும், அவரைக் காப்பாற்றுவதற்காக நான் அங்கே ஒளிந்து கொள்ள வந்திருக்கிறேன் என்பதையும், எனக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் அவர் செய்து கொடுக்க வேண்டும் என்பதையும் நீங்கள் சுருக்கமாக ஒரு கடிதத்தில் எழுதிக் கொடுங்கள். அதை நான் அவரிடம் சேர்த்து, அவர் காட்டும் இடத்தில் ஒளிந்து கொண்டிருக் கிறேன். உங்கள் காயம் ஆறினவுடன் நீங்கள் அங்கே வந்து சேருங்கள். அதற்குள் சேர்வைகாரரையும் போலீசார் விட்டு விடுவார்கள்" என்றாள். அந்த ஏற்பாட்டையும் அவர்கள் முழுமனதோடு ஒப்புக் கொண்டனர். மாசிலாமணிக்குக் கடிதம் எழுதுவதற்குத் தேவையான ஒரு காகிதத்தையும், பென்சிலையும் உடனே நீலலோசனியம்மாள் கொடுக்க, அதை வாங்கி ரமாமணியம்மாள் படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டபடி கடிதம் எழுதத் தொடங்கினாள். தாங்கள் பட்டணம் வந்த வரலாற்றையும், தங்களுக்கும் நீலலோசனியம்மாளுக்கும் சிநேகம் ஏற்பட்ட விதத்தையும், சத்திரத்தில் இடும்பன் சேர்வைகாரன் மோதிரம் திருடி சிறைச்சாலையில் இருப்பதையும், தாங்கள் கோமளேசு வரன் பேட்டைக்குப் போய் கலியான வீட்டில் படுத்திருந்த விவரத்தையும், இடும்பன் சேர்வைகாரனுடைய ஆள்கள் வந்து ஆள் மாறாட்டமாகத் தங்களை அங்கஹறினப்படுத்தி ஓடிய சமயத் தில் பிடிபட்டுச் சிறைச்சாலையில் இருக்கும் வரலாற்றையும், அந்த ஆள்களைத் தப்ப வைப்பதற்குத் தாங்கள் போலீசாரிடம் பொய்