பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 79 வாக்குமூலம் கொடுத்ததையும், இடும்பன் சேர்வைகாரனைத் தப்ப வைக்கும் பொருட்டு நீலலோசனியம்மாள் அங்கே ஒளிந்து கொள்ள வருவதையும் சுருக்கமாகக் கண்டு, அந்த அம்மாளைச் செளகரியமாகவும் ஜாக்கிரதையாகவும் பார்த்துக் கொள்ளும்படி மாசிலாமணியை வேண்டி அந்தக் கடிதத்தை எழுதி முடித்து, ஒர் உறை தருவித்து அதற்குள் கடிதத்தைப் போட்டு ஒட்டி நீலலோசனியம்மாளிடம் கொடுத்தாள். விசாலாகூஜி யம்மாளும் நீலலோசனியம்மாளைப் பார்த்து, "அம்மா! நமக்குள் ஏற்பட்டி ருக்கும் உடன்படிக்கை விஷயத்தை மற்றவர் அறிந்தால் பொறாமைப் படுவார்கள். அந்த மாசிலாமணிப் பிள்ளை மகா துர்க்குணமுடைய மனிதர். அவருக்கு இந்தச் சங்கதி தெரிந்தால், எங்களுக்குக் கெடுதல் நேரும். ஆகையால், அந்தப் பத்திரத்தின் சங்கதி எதையும் அவருக்குச் சொல்ல வேண்டாம்" என்று நயந்து வற்புறுத்திக் கூறினாள். நீலலோசனியம்மாள் அவர்களுடைய விருப்பத்தின்படி எச்சரிப்பாய் நடந்து கொள்வதாக உறுதி கூறிய பின், அவர்க்ளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றாள். அன்றைய இரவு கழிந்தது. மறுநாள் காலை பத்துமணி நேரமிருக்கலாம். நீலலோசனியம்மாள் மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்து ரமாமணியம்மாள் முதலியோருக்கெதிரில் போய் நின்றாள். ஊருக்குப் போவதாகச் சென்றவள் மறுபடி வந்தது அவர்களுக்கு நிரம்பவும் ஆச்சரியகரமாக இருந்தது. அதுவுமன்றி, அந்த அம்மாள் ஒருவித கிலேசத்தோடு வந்திருந்ததும் தெரிந்தது. அதைக் கண்ட விசாலாகூஜியம்மாள், "என்ன அம்மா விசேஷம்? எப்போது ஊருக்குப் புறப்படப் போகிறீர்கள்?" என்றாள். நீலலோசனியம்மாள் மிகுந்த கிலேசத்தோடு, "என்ன போங்கள். நான் ஒரு மூடக் காரியம் செய்து விட்டேன். இன்று காலையில் நான் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு போஜனம் முடித்துக் கொண்டு ரயிலில் ஏற உத்தேசித்து, சமுத்திரத்தில் இறங்கி ஸ்நானம் செய்தேன். நீங்கள் நேற்று மாசிலாமணிப் பிள்ளைக்கு எழுதிக் கொடுத்த கடிதம் என் மடியில் இருந்ததென்பதை மறந்து நான் தண்ணில் முழுகி விட்டேன். கடிதம் சமுத்திரத்திற்குள் எங்கேயோ விழுந்து காணாமல் போய்விட்டது. கரை ஏறியவுடன் எனக்குக்