பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மாயா விநோதப் பரதேசி கடிதத்தின் ஞாபகம் வந்தது. மடியில் தேடிப் பார்க்கிறேன் கடிதம் இல்லை. என் மடிசஞ்சியில் இருக்கிறதோ என்றும் பார்த்தேன். அதிலும் இல்லை. அற்காகத்தான் நான் மறுபடி இங்கே வந்தேன். இன்னொரு கடிதம் எழுதும்படியான சிரமத் தையும் துன்பத்தை யும் ரமாமணியம்மாளுக்கு நான் கொடுக்க நேர்ந்துவிட்டதைப் பற்றி என் மனம் நிரம்பவும் வருந்துகிறது" என்று நயமாகக் கூறினாள். அதைக் கேட்ட ரமாமணியம்மாள் இனிமையாக நகைத்து, "இது தானா ஒரு பெரிய காரியம்? இதோ ஒரு நிமிஷத்தில் இன்னொரு கடிதம் எழுதிக் கொடுக்கிறேன். மறதி என்பது எல்லோருக்கும் உள்ளது தானே" என்று தன் உதட்டை அசைத்து முணுமுணுத்து மெதுவாகப் பேசினாள். நீலலோசனியம்மாள் மறுபடி காகிதம், பென்சில், உறை ஆகிய மூன்றையும் கொடுக்க, ரமாமணியம்மாள் அவற்றை வாங்கி முன் போலவே இன்னொரு கடிதமெழுதி உறைக்குள் போட்டு ஒட்டி மேல் விலாசம் எழுதி நீலலோசனி யம்மாளிடம் கொடுத்தாள். அதைப் பெற்றுக் கொண்ட அந்த அம்மாள் முடிவாக அவர்களிடம் செலவு பெற்றுக் கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியில் சென்று விட்டாள். ★ ★ ★ அங்கு நிலைமை அவ்வாறிருக்க, சிறைச்சாலையில் அடைக்கப் பட்டிருந்த நமது இடும்பன் சேர்வைகாரணை நாம் சிறிது கவனிப்போம். அவன் நீலலோசனியம்மாளது மோதிரத்தைத் திருடிய குற்றத்திற்காக வியாழக்கிழமை இரவில் கைது செய்யப் பட்ட பின்னர், அந்த இரவு முழுதும் போலீஸ் ஸ்டேஷன் லாக் கப்பில் வைக்கப்பட்டிருந்து, மறுநாள் காலையில் மாஜிஸ்டிரேட் கச்சேரியைச் சார்ந்த சப்ஜெயிலுக்கு அனுப்பப்பட்டான். புதிதாகக் கைதி செய்யப்பட்ட குற்றவாளிகள் தங்கள் வழக்கின் விசாரணை முடிவடைகிற வரையில் இருப்பதற்காக ஏற்படுத்தப் பட்டுள்ள சிறைச்சாலைக்கு சப்ஜெயில் என்று பெயர். இடும்பன் சேர்வைகாரன் அடைக்கப்பட்டிருந்த சப்ஜெயில் நிரம்பவும் அழுத்தமும் பந்தோபஸ்துமான ஒரு பெரிய கட்டிடம். அது இரண்டு கட்டுகள் உடையதாக இருந்தது. ஒவ்வொரு கட்டின் நடுவிலும் பெருத்த முற்றம் இருந்தது. அந்த முற்றத்தைச் சுற்றி