பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 81 நான்கு பக்கங்களிலும் பெருத்த தாழ்வாரங்கள் இருந்தன. ஒவ்வொரு தாழ்வாரத்திலும் தடித்த இரும்புக் கம்பிக் கதவுகளைக் கொண்ட சிறிய சிறிய அறைகள் வரிசையாக அமைந்திருந்தன. மேற்படி இரும்புக் கம்பிக் கதவுகள் அழுத்தமான பெரிய இரட்டைப் பூட்டுகளால் பூட்டி பத்திரப்படுத்தப்பட்டிருந்தன. சில அறைகளில் அறைக்கு ஒவ்வொரு கைதி வீதம் விடப்பட்டிருந் தனர். எந்தக் கைதியின் விஷயத்தில் தக்க ருஜூ அகப்பட்டு விட்டதோ, அந்தக் கைதி பலருடன் ஒன்றாக இருக்க விடப்பட்டி ருந்தான். எந்தக் கைதியின் வழக்கில் சரியான ருஜூ அகப்படாமல் இருந்ததோ, அந்தக் கைதியைப் போலீசார் தனியாக அடைத்து வைத்திருந்தனர். அதுவுமன்றி, நிரம்பவும் துஷ்டர்களாகவும், தந்திரிகளாகவும் தோன்றிய குற்றவாளிகளை மற்றவருடன் பேசும்படி விடுத்தால், அவர்கள் மற்றவருக்கு துர்ப்போதனை களும், துர்யோசனைகளும் சொல்லிக் கொடுத்து அவர்களது மனதைக் கலைத்து விடுவார்கள் என்ற நினைவினாலும் சில கைதி களைத் தனிமையில் இருக்க விடுத்தனர். மேற்படி அறைகளை அடுத்தாற்போல் இருந்த நான்கு தாழ்வாரங்களிலும் ஒவ்வொரு தாழ்வாரத்தில் ஒவ்வொரு ஜெவானாக நான்கு ஜெவான்கள் கத்தி துப்பாக்கிகளுடன் இரவு பகல் பாராக் கொடுத்திருந்தனர். அவர்கள் தாழ்வாரத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குப் போவதும், மறுபடி திரும்புவதுமாய் அங்குமிங்கும் வட்டமிட்டுக் கொண்டே நிரம்பவும் ஜாக்கிரதையாகக் காவல் காத்திருந்தனர். மேற்படி காவலாளர்களைத் தவிர, வேறு பல ஜெவான்கள் ஆயுதபாணிகளாய் அடிக்கடி வருவதும், ஒவ்வொரு வழக்கிற்கும் சம்பந்தப்பட்ட கைதியை, அல்லது, கைதிகளை விலங்கிட்டு மாஜிஸ்டிரேட்டின் கச்சேரிக்கு அழைத்துப் போவதும் மறுபடி கொணர்ந்து அடைப்பதுமாய் இருந்தனர். அத்தகைய ஏற்பாடு களுடன் இருந்த சிறைச்சாலையின் இரண்டாவது கட்டில் ஒரு மூலையிலிருந்த ஒர் அறையில் நமது இடும்பன் சேர்வைகாரன் தனிமையில் அடைக்கப்ண்பட்டிருந்தான். மிகுந்த கோபத்தினாலும், ஆத்திரத்தினாலும் அவனது தேகம் படபடத்து ஆடிக்கொண் டிருந்தது; அவனது மீசைகள் துடித்தன, கண்களில் - தீப்பொறி பறந்தது. அவனது மனம் கட்டிலடங்காமல் பொங்கித் Inr.s.fi.u.HH-6