பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மாயா விநோதப் பரதேசி தவித்தது. தான் தனது ஆட்களுடன் மனோன்மணியம்மாளை அபகரிக்க வந்த காலத்தில் தாங்கள் ஏமாறிப் போனதற்கு ஒர் ஆறுதலாக அந்த இரண்டாவது முயற்சியில்தான் எப்படியும் மாசிலா மணியின் சதியாலோசனையை நிறைவேற்றியே திரவேண்டும் என்று உறுதி கொண்டு வந்திருந்த சந்தர்ப்பத்தில், தான் சிறிதும் எதிர்பார்க்காதபடி, அத்தகைய பெருத்த இடையூறு குறுக்கிட்டு விட்டதே என்ற நினைவினால் தூண்டப்பட்டு, அவன் அப்போதே காட்டிலிருந்து புதிதாகப் பிடிபட்டு அடைக்கப்பட்ட கொடிய கரடி, புலி முதலிய விலங்குகள் போல ஆத்திரமே வடிவாக நின்று அங்குமிங்கும் உலாவுவதும், நெடுமூச்செறிவதும் வெளியில் தனது பார்வையைச் செலுத்தி ஆராய்ச்சி செய்வதும், தனக்குத் தானே பலவாறு எண்ணமிடுவதுமாய் இருந்தான். "ஆகா! என்ன இடைஞ்சல் வந்து குறுக்கிட்டு விட்டது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அல்லவா? நிச்சயதார்த்தம் நடந்து போய் விடுமே; நேற்று இரவு வண்டியிலேறி என்னுடைய ஆள்கள் இன்று காலையில் வந்திருப்பார்களே எழும்பூர் ரயிலடியில் நான் வந்திருந்து அவர்களைப் பார்ப்பதாகச் சொல்லி இருந்தேனே! என்னைக் காணாமல், அவர்கள் என்ன செய்கிறார்களோ தெரிய வில்லையே. கோமளேசுவரன் பேட்டை இன்ன தெருவில், மன்னார்குடியார் வந்திறங்குவார்கள் என்றும், அவர்கள் இருக்கும் வீட்டில் பந்தல் வாழை மரங்கள் முதலிய அலங்காரங்கள் இருக்கும் என்றும், அவர்களில் இன்னின்னாரை இன்னவிதம் நடத்த வேண்டும் என்றும் நான் அவர்களிடம் சொன்னதை அவர் கள் ஒரு வேளை மறந்து விட்டார்களோ என்னவோ தெரிய வில்லையே! அல்லது, அவர்கள் அந்த விவரங்களை மறக்காமல் நினைத்திருந் தாலும், மன்னார்குடியார் இன்னார் என்ற அடை யாளமே என்னுடைய ஆள்களுக்குத் தெரியாது. ரமாமணியின் அடையாளமும் அவர்களுக்குத் தெரியாது. அதுபோல, ரமா மணிக்கும் அவர்களுடைய அடையாளம் தெரியாது. நானோ இவ்விடத்தில் அடைபட்டிருக்கிறேன். என் வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்பதும் தெரியவில்லை. இது இன் றைக்கே விசாரணைக்கு வந்தாலும், நான் தண்டனை அடை யாமல் விடுபடுவேன் என்பதும் நிச்சயமில்லை. இந்த