பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 83 நிலைமையில், ரமாமணியம்மாள் முதலியோர் சத்திரத்திலிருந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். என் ஆள்களோ என்னைக் காணாமல் எங்கே அலைகிறார்களோ, அல்லது, என்ன செய்கிறார்களோ. இன்று இரவு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை!" என்று இடும்பன் சேர்வைகாரன் பலவாறு எண்ணமிட்டு மிகுந்த கலக்கமும், கவலை யும், ஆத்திரமும் கொண்டு நரக வேதனை அடைந்தவனாய் இருந்தான். ஒவ்வொரு நிமிஷம் கழிவதும் ஒவ்வொரு யுகம் கழிவது போல இருந்தது. அன்று முழுதும் ஆகாரத்தின் மேலா வது, தூக்கத்திலாவது அவனது மனம் நாட்டங்கொள்ளாமல் கட்டிலடங்காமல் துடிதுடித்துப் பறந்து கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்கள் கழிந்தது மூன்று பெருத்த கற்பகாலம் கழிந்தது போலவே தோன்றியது. ஆகாரம், நித்திரை முதலியவை இல்லா மையாலும், ஓயாமல் மனக்கவலையும் ஆவலும் கொண்டு அல்லல்பட்டிருந்தமையாலும், அந்த மூன்று தினங்களில் அவன் ஒரு துரும்பு போல மெலிந்து போனான். அவனது முகம் வெளுத்து விகாரமடைந்து போயிற்று. கண்கள் குழிவடைந்து போயின. அவனது சிவனில் பெரும் பாகமும் போய்விட்டதாகத் தோன்றியது. அந்த மூன்று தினங்களில் வெளியுலகத்தில் என்ன சம்பவங்கள் நடந்தன என்பதே அவனுக்குத் தெரியாதிருந் தமையால் அவன் அதே ஆவலினாலும், ஏக்கத்தினாலும் பைத்தியம் கொண்டவன் போலக் காணப்பட்டான். காலை யிலும், பகலிலும், மாலையிலும் போலீசார் வந்து கைதிகளை வெளியில் அழைத்துப் போய் தேகபாதை நிவர்த்தி, ஸ்நானம் முதலியவைகளைச் செய்வித்துக் கொணர்ந்து அடைத்த காலத் திலும், சாப்பாடு கொடுத்த காலத்திலும், இடும்பன் சேர்வைகாரன் ஜெவான்களை நோக்கித் தனது வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்று கேட்டான். அவர்கள் தங்களுக்கு அந்தத் தகவல் தெரியாதென்று மறுமொழி கூறி விடுவார்கள். வெள்ளிக்கிழமை இரவில் பிடிபட்ட அவனது ஆட்களான பதினாறு மனிதர்களும் அந்தச் சிறைச்சாலையின் முன் கட்டிலிருந்த அறைகளில் அறைக்கு ஒருவராய் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் அவர்களும்