பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மாயா விநோதப் பரதேசி இடும்பன் சேர்வைகாரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது. ஞாயிற்றுக்கிழமை பகல் வரையில் இடும்பன் சேர்வைகாரன் தனது அறையில் தனியாகவே இருந்து வந்தான். புதிதாக வந்த கைதிகளை எல்லாம் போலீசார் மற்ற அறைகளில் அடைத்தனரே அன்றி அவன் இருந்த அறைக்குக் கொண்டு வரவில்லை. திங்கள் கிழமை பகல் ஒரு மணி சமயத்தில் இரண்டு ஜெவான்கள் கத்தி துப்பாக்கி முதலிய ஆயுதங்களை ஏந்தியவர்களாய் ஒரு புதிய கைதியை அழைத்து வந்தனர்; அந்தக் கைதியின் கைகள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து விலங்கிட்டு இருந்தார்கள். அந்த ஜெவான்கள் அந்தக் கட்டிலிருந்த நான்கு தாழ்வாரங்களின் வழியாக இரண்டு மூன்று தடவை சென்று, அந்தப் புதிய கைதியை அடைப்பதற்கு எந்த அறை தகுதியான தென்று ஆராய்ச்சி செய்தபின் முடிவாக நமது இடும்பன் சேர்வைகாரன் இருந்த அறைக்கெதிரில் வந்து நின்று, "சரி; மற்ற அறைகளில் பலர் அடைபட்டிருக்கிறார்கள். இதில் தான் ஒரே ஒருவன் இருக்கிறான். இதற்குள் இவரை விட்டு வைப்போம்" என்று கூறிய வண்ணம், அந்த அறையின் பூட்டை விலக்கி கதவைத் திறந்து புதிய கைதியை உள்ளே அனுப்பி, அவரது கை விலங்கை நீக்கி எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டுப் போயினர். அவ்வாறு புதிதாக வந்த கைதி ஒரு துருக்க சாயப்பு: அவர் நிரம்பவும் விலைபெற்ற படாடோபமான தலைப்பாகை, சட்டைகள் நிஜார் முதலிய ஆடைகளைத் தரித்திருந்ததன்றி, கைவிரல்களில் பல மோதிரங்களையும் அணிந்திருந்தார். அவரது சட்டைப்பையில் தோலினால் செய்யப்பட்ட பெரிய பணப்பை (மணிபர்ஸ்) ஒன்று காணப்பட்டது. அநேகமாய் மற்ற எல்லாக் கைதிகளும் முரடர்களாகவும், ஏழைகளாகவும், அநாகரிகர்க ளாகவும் இருந்ததற்கு மாறாக அந்தத் துருக்க சாயப்பு பணக்காரர் போலவும், கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர் போலவும் காணப்பட்டார். மற்ற கீழ்த்தரமான கைதிகளோடு தம்மையும் போலீசார் கொணர்ந்து அடைத்துவிட்டதைப் பற்றி அந்த சாயப்பு நிரம்பவும் பதைத்துக் குன்றிப் போனவராகக் காணப் பட்டார் ஆனாலும், அவர் எவ்வித குற்றமும் செய்யாத பரிசுத்தர்