பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 85 போலவும், எதற்கும் அஞ்சாதவர் போலவும், தாம் எப்படியும் விடுதலையடைந்து விடலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டவர் போலவும் காணப்பட்டு ஒரு மூலையில் கம்பீரமாக உட்கார்ந்து, கால்மேல் கால் போட்ட வண்ணம் இருந்து ஏதோ சிந்தனை செய் வதும் தனது சகாக் கைதி எப்படிப்பட்டவன் என்பதைக் கவனிப் பதுமாய் இருந்தார். அப்போது தாழ்வாரத்தில் பாராக் கொடுத்துக் கொண்டிருந்த ஜெவான் உலாத்தியபடி அந்த அறைக்கெதிரில் வந்து நின்று அந்த சாயப்புவைப் பார்த்து, "ஐயா! சாயப்பு என்ன குற்றத்திற்காக உம்மைக் கைதி செய்து கொண்டு வந்திருக்கி றார்கள்? உம்மைப் பார்த்தால், தக்க பெரிய மனிதர் போலிருக் கிறதே" என்று வினவினான். உடனே சாயப்பு நிரம்பவும் அலட்சியமாகவும் முறுக்காகவும் பேசத் தொடங்கி, "இவர்கள் கைதி செய்து கொண்டு வந்து விட்டால், என்னைத் தண்டித்துவிட முடியுமோ? இருக்கட்டும், ஒருகை பார்த்து விடுகிறேன். கல்கத்தாவில் இருந்து நார்டன் துரையை வரவழைத்தால், இந்தப் போலீசார் எல்லோரும் உடனே பஞ்சாய்ப் பறக்க வேண்டியது தானே; இருக்கட்டும். இவர்கள் செய்வதை எல்லாம் செய்யட்டும். என்னை அக்கிரமமாகக் கைதி செய்து அவமானப்படுத்தியதற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மான நஷ்ட தாவா போட்டு விடுகிறேன்" என்றார். அதைக் கேட்ட பாராக்காரர் சிரித்துக் கொண்டு, "ஐயா! சாயப்பு! என்ன குற்றத்திற்காக உம்மை இங்கே அடைத்திருக்கிறார்கள் என்று நான் கேட்கிறேன். நீர் உம்முடைய கோபத்தை எல்லாம் என்னிடம் காட்டுகிறீரே! என்றான். உடனே சாயப்பு முன் போலவே கோபமாய்ப் பேசத் தொடங்கி, "எனக்கு என்ன ஐயா கோபம் இருக்கிறது? இது உங்களுடைய ஆதீனம். நான் என்னுடைய கோபத்தை இங்கே காட்டினால் அது செல்லுமா? ஒரு நாளும் செல்லாது. நான் ஒரு பெரிய கம்பெனியில் கஜான்சி உத்தியோகம் பார்க்கிறவன். கம்பெனியின் பணத்தில் மூன்று லட்சம் ரூபாய் குறைகிறதாம். அதை நான் தான் எடுத்திருப்பேன் என்று சந்தேகப்பட்டு என்னைக் கைதி செய்திருக்கிறார்கள்.