பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 87 கொடுத்தார். அதை வாங்கி ஒரு பக்கத்தில் வைத்து உண்டபின் அவரது காதில் அவரது சொந்தக்காரர் தணிவான குரலில் ஏதோ ரகசியமான செய்தி கூறினார். அதைக் கேட்ட ஜானிஜான் கான் சாயப்பு, "இப்போது ஜாமீனில் விடுவதற்கு இருபதினாயிரம். பிறகு கேஸை மேலே அனுப்பாமல் தள்ளி விடுவதற்கு ஒரு லட்சம். அதற்குச் சம்மதமானால் சப் இன்ஸ்பெக்டரை வரச்சொல். என் கையில் இருக்கிற பணத்தில் இருபதினாயிரம் ரூபாயை இங்கேயே கொடுத்து விடுகிறேன்" என்று மெதுவான குரலில் கூறினார். அதைக் கேட்டுக் கொண்டு அவரது சொந்தக்காரர் போய்விட்டார். அவர்கள் ஒருவருக் கொருவர் நிரம்பவும் ரகசியமான வார்த்தை சொல்லிக் கொண்டனர் ஆனாலும் இடும்பன் சேர்வைகாரன் கவனிப்பாக உற்றுக் கேட்டு அவர்கள் பேசிக் கொண்டதை எல்லாம் அப்படியே தெரிந்து கொண்டு ஒன்றையும் அறியாதவன் போல ஒரு மூலையில் தனது படுக்கையை விரித்துப் படுத்துத் தூங்குகிறவன் போல நடித்துக் கொண்டிருந்தான். - - அதன் பிறகு இரண்டு நாழிகை காலம் கழிந்தது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் வெளியில் இருந்து வந்து அந்த அறைக்கு வெளியில் நின்று கம்பியின் இடுக்கால் உள்ளே பார்த்து "சாயப்பூ! சாயப்பூ!" என்று மெதுவாக இரண்டு தரம் கூப்பிட்டார். அது வரையில் சுவரில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த சாயப்பு திடுக்கிட்டு விரைவாக எழுந்து கம்பிக்கருகில் போய் நின்று, சப் இன்ஸ்பெக்டரிடம் ரகசியமாகச் சிறிது நேரம் சம்பாவித்திருந்த பின், தமது சட்டைப் பையிலிருந்த மணிபர்சை எடுத்து அதற்குள் ஏராளமாகத் திணித்து வைக்கப்பட்டிருந்த நோட்டுச் சுருளை எடுத்து சப் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து, "எல்லாம் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாய் இருபது நோட்டுகள் இருக்கின்றன. எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். என்னை எப்போது ஜாமீனில் விடுவார்கள்?" என்றார். சப் இன்ஸ்பெக்டர், "நாளை காலை ஏழு மணிக்கு நான் வந்து உம்மைப் பார்க்கிறேன். காலை பத்து மணிக்குள் நீர் வெளியில் வந்து விடும்படியான வழியைத் தேடுகிறேன்; பயப்பட