பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 7 அவர் ஒருவருக்கு மாத்திரமே அவசியமான பாத்திரங்களும், படுக்கையும் இருக்கும். நீங்கள் போய்ப் புதிதாய் எல்லா வற்றையும் தருவிப்பது வீண் பிரயாசையான வேலை. அதோடு, எல்லாச் சாமான்களும் வந்து சேருவதற்குள் வீண் கால தாமதம் ஆகும். அதுவுமன்றி, நமக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இக்கட்டான நிலைமையில் பிள்ளையாண்டானைப் பற்றி அப்போதைக் கப்போது நமக்குக் கிடைக்கும் தகவல்களை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்ளவும், மேலே ஆகவேண்டிய விஷயங் களைப் பற்றிக் கலந்து யோசனை செய்யவும், நீங்கள் என் பங்களாவிலேயே இருப்பது நிரம்பவும் அனுகூலமாக இருக்கும். இவைகளை எல்லாம் உத்தேசித்து நான் உங்களுக்கு என் பங்களாவிலேயே ஜாகை தயாரித்திருக்கிறேன். ஆகையால் நீங்கள் எல்லோரும் அவ்விடத்திற்கே எழுந்தருள வேண்டும்" என்றார். அதைக் கேட்ட வேலாயுதம் பிள்ளை அன்பாகவும் நயமாகவும் பேசத் தொட்ங்கி, "நீங்கள் சொல்லுகிறபடி நாங்கள் அங்கே வந்திருப்பதில் பல அனுகூலங்கள் இருக்கின்றன என்பது வாஸ் தவமே. ஆனால், எல்லாவற்றிலும் முக்கியமான இன்னொரு விஷயம் இருக்கிறது. இன்றைய தினம் நாள் அவ்வளவு நன்றாக இல்லை. நாம் ஒருவருக்கொருவர் சம்பந்தம் செய்து கொள்ளப் போகிறவர்கள். தற்கால அனுகூல பிரதிகூலங்களை நாம் கவனிப்பதை விட நம்முடைய நீடித்த பாந்தவ்வியத்தையும், அன்னியோன்னிய பாவத்தையுமே நாம் அதிக முக்கியமாய்க் கோர வேண்டும். இன்று பரணி கிருத்திகையாய் இருப்பதோடு இன்னும் மற்ற அம்சங்களும் திருப்திகரமாக இல்லை ஆகையால், இப்படிப்பட்ட அசுபமான தினத்தில் நாங்கள் உங்கள் கிருகத்தில் பிரவேசிப்பது அவ்வளவு உசிதமான காரியமல்ல. நாம் இன்று ஒருவரை ஒருவர் சந்தித்தது கூட அவ்வளவு சரியான காரியமல்ல. நேற்று இருந்த கலவரத்தில் இதைப் பற்றி எண்ணாமல் நாங்கள் தந்தி அனுப்பி விட்டோம். நீங்களும் எங்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று வந்து விட்டீர்கள். இந்தச் சந்திப்பு தான் என்னவோ நம்மை மீறி நடந்து போய்விட்டது. நாம் செய்த பிழை இவ்வளவோடு நிற்கட்டும். இப்படிப்பட்ட கெட்ட தினத் தில்