பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - மாயா விநோதப் பரதேசி மாத்திரம் உடனே பணங் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். மற்ற வேலையை நான் ஒரு நொடியில் முடித்து விடுவேன். நான் போய் வருகிறேன். இன்று மாலையில் நான் என் ஆளை அனுப்பினால், அவன் நாளைய தினம் கும்பகோணத்துக் காரியத்தை முடித்துக் கொண்டு மறுநாள் இங்கே வந்து சேருவான். இன்று செவ்வாய்க் கிழமை அல்லவா. வியாழக் கிழமை காலை 8, அல்லது, 9. மணிக்கு நான் இங்கே வந்து முடிவை உனக்குத் தெரிவிக்கிறேன்" என்றார். - உடனே சேர்வைகாரன், "சரி, அப்படியே செய்யுங்கள். இந்தச் சமயத்தில் நான் உங்களைத் தான் மலை போல நம்பி இருக்கிறேன். எப்படியாவது முயற்சி செய்து நீங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும். ஆனால், எனக்கு ஒரு நினைவு தோன்று கிறது. அந்த மாசிலாமணிப் பிள்ளையே நேரில் வருவாரோ மாட்டாரோ. அநேகமாய் அவர் பணத்தைத் தான் கொடுத்தனுப்பு வார் என்று நினைக்கிறேன். நீங்கள் அனுப்புகிற ஆள் நம்பிக்கைக் குப் பாத்திரமானவராக இருக்க வேண்டும். அதை நீங்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும்" என்று நிரம்பவும் பணிவாகக் கூறினான். சாயப்பு, "ஐயா! அதைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். என்னுடைய ஆளிடம் லட்சம் ரூபாய் கொடுத்தால் கூட, அவன் அதை பத்திரமாக கொண்டு வந்து சேர்ப்பான். ஆனால் அவனுக்கு நேற்று உடம்பு ஜூரமாக இருந்தது. அவன் நல்ல நிலைமையில் இருந்தால் அவனை அனுப்புகிறேன். இல்லாவிட்டால், உமக்காக நானே நேரில் போய்விட்டு வந்து விடுகிறேன்" என்றார். அவ்வாறு கூறிய பின் சாயப்பு அவ்விடத்தை விட்டு வெளியில் வந்தார். உடனே ஜெவான் மறுபடி கதவை மூடிப் பூட்டினான். அவனும் மற்ற இருவரும் அவ்விடத்தை விட்டுப் போய்விட்டனர். 女 ★ ★ . மேலே குறிக்கப்பட்ட இடும்பன் சேர்வைகாரனது கடிதம் கும்பகோணத்திற்குப் போய்ச் சேர்ந்த வரலாற்றை நாம் தெரிவிக்கும் முன், அவ்விடத்தில் மாசிலாமணி எவ்வித நிலைமையில் இருந்தான் என்பதைச் சுருக்கமாகக் கூறுவோம். அவன் மனோன்