பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 97 விஷயத்தை என் சிநேகிதர் கேட்டால், என்னைவிட பத்து பங்கு அதிகமாய் ஆச்சரியமடைவார். அதைப் பற்றி, நான் ஒரு வரி என் சிநேகிதருக்கு எழுதலாம் என்று நினைக்கிறேன். தயவு செய்து அந்தக் கடிதத்தை கொடுங்கள்" என்றான். உடனே சாயப்பு கடிதத்தை எடுத்துக் கொடுக்க, இடும்பன் சேர்வைகாரன் அதன் அடியில் கீழே கண்டபடி சேர்த்தெழுதி னான். "சென்னை கலெக்டர் பட்டாபிராம பிள்ளையின் வீட்டில் நடந்த சம்பவத்தை நாம் பத்திரிகையில் படித்தோமல்லவா, வேலாயுதம் பிள்ளையின் மைத்துணி என்று சொல்லிக் கொண்டு வந்து, இரவில் முரடர்களால் அபகரிக்கப்பட்டுப் போன பெண் உண்மையில் பெண் அல்லவாம். கலெக்டருடைய பெண்ணைக் கட்ட இருந்த மாப்பிளைப் பையனே அந்தப் பெண்ணின் குணாதி சயங்களை அறிய அப்படிப் பெண் வேஷம் போட்டுக் கொண்டு அங்கே வந்திருந்தானாம்" என்று இடும்பன் சேர்வைகாரன் சேர்த்து எழுதி, அதை மறுபடியும் சாயப்புவினிடம் கொடுக்க, அதை அவர் வாங்கி முன் போல பத்திரப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு இரண்டு நாழிகை காலம் கழிந்தது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேறொரு ஜெவானோடு மறுபடி அங்கே வந்து சேர்ந்தார். அந்த ஜெவான் தனது கையில் வைத்திருந்த திறவு கோலால் அந்த அறை யின் பூட்டைத் திறந்து விட்டான். உடனே சப் இன்ஸ்பெக்டர் உள்ளே நோக்கி, "சாயப்பு ஐயா! உம்மை ஜாமீனில் விடும்படி உத்தரவு ஆகிவிட்டது. வாரும் வெளியில்" என்றார். அதைக் கேட்கவே சாயப்புவின் முகம் சந்தோஷத்தினால் மலர்ந்து போயிற்று. அவர் உடனே இடும்பன் சேர்வைகாரனைத் தனியாக ஒரு மூலைக்கு அழைத்துப் போய் வைத்துக் கொண்டு, "சேர்வைகாரரே! பார்த்திரா என்னுடைய பணம் செய்த வேலையை. மகா ஆடம்பரமாக என்னைப் பிடித்து வந்து இங்கே அடைத்த இந்த சப் இன்ஸ்பெக்டர் என்னுடைய இருபதாயிரம் ரூபாயை வாங்கியவுடன் நாய் போலப் படிந்து எனக்கு உபசரணை செய்கிறான் பார்த்தீரா? நான் உம்மை எப்படியும் தப்ப வைப்பது நிச்சயம். ஆனால், அந்த மாசிலாமணிப் பிள்ளை tas.oh.u.III–7