பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மாயா விநோதப் பரதேசி விட்டார்களாம். அந்த ஆள்களும் இப்போது பிடிபட்டிருக்கும் ஆள்களும் ஒரே ஆள்கள் தானா என்பதைப் பற்றியும் போலிசார் விசாரணை செய்து வருகிறார்களாம். அது ருஜுவாகும் பட்சத்தில், அதிலும் போலீசார் உம்மைச் சம்பந்தப்படுத்த உத்தேசம் என்று சப் இன்ஸ்பெக்டர் சொன்னார்" என்றார். அந்த வரலாற்றைக் கேட்ட இடும்பன் சேர்வைகாரன் திடுக்கிட்டு, "ஆகா! அப்படியா!" என்று மிகுந்த வியப்பைக் காட்டும் சொற்களைக் கூறினான். உடனே சாயப்பு, "ஐயா! நீர் பேசுவதைப் பார்த்தால், இந்த விஷயம் ஏற்கெனவே உமக்குத் தெரியும் போலிருக்கிறதே" என்றார். இடும்பன் சேர்வைகாரன், "இல்லை இல்லை. நானும் அந்த மாசிலாமணிப் பிள்ளையும் ஒரு நாள் சமாசாரப் பத்திரிகை வாசித்த காலத்தில், இந்தத் தகவல் அதில் வெளியாய் இருந்ததைப் படித்து ஆச்சரியம் அடைந்தோம். அந்தப் பெண்ணின் புருஷனே பெண் வேஷம் போட்டுக் கொண்டு வந்தான் என்று இப்போது நீங்கள் சொன்னதைக் கேட்கவே எனக்கு அது நிரம்பவும் அதிசயமாகப் பட்டது. வேறொன்றுமில்லை" என்றான். சாயப்பு, "ஓகோ அப்படியா சங்கதி என்னவோ, போலீசார் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் செரிக்க வேண்டும் அல்லவா. அதற்கு நிரபராதிகளை எல்லாம் வயிறெரியச் செய்கிறார்கள். ஆனால் மொத்தத்தில் நான் ஒரு விஷயம் மாத்திரம் நிச்சயமாகச் சொல்லுவேன். இவர்கள் இந்தப் போலீஸ் வேலையில் இருந்து இவ்வளவு அபாரமான சொத்துக்களை கொள்ளையடிக்கிறார்களே! இவர்களில் எவனாவது முன்னுக்கு வந்து பிள்ளை குட்டிகளோடு நீடித்து கேஷமமாய் வாழ்ந்த துண்டா? அது ஒரு நாளுமில்லை. அக்கிரமக் காசு அடியோடு வேரைக் கல்லி விஷத்தை வைத்து அவர்கள் பூண்டோடு நாசமாய்ப் போய்விடும்படி செய்வது நிச்சயம்" என்றார். அதைக் கேட்ட இடும்பன் சேர்வைகாரன், "ஆம், ஆம், நீங்கள் சொல்வது மெய்யான விஷயம். இந்தப் புது மாப்பிள்ளையின்