பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலையில் இலட்சியமும் வீரனும்

33

பட முடியாமல், புதிய குறிக்கோள்கள் தோன்றின. அவை பயனின்றிப் போயினும் அவை தோன்றிய காலத்தில் மக்களது வருங்காலம் பற்றிய நற்கனவுகளை அவை உண்டாக்கின. மனிதனுக்கு நல்வாழ்வு வேண்டும்; அதனை அவன் பெறலாம் என்ற நம்பிக்கையை ஊட்டியதில் யதார்த்தத்துக்குப் புறம்பான இக்கருத்துக்களுக்கு ஒரு பாத்திரம் உண்டு.

சோஷலிஸ்டு ரியலிசம் வாழ்க்கையை அதன் புரட்சிகரமான மாறுதல் கதியில் சித்திரிக்கிறது. பழமை மீது, புதுமை பெறும் வெற்றிகளைச் சுட்டிக்காட்டுகிறது. இவ்வெற்றிகள் கம்யூனிச சமுதாயமாக மலரும் என்று வருங்கால நிலைமையை, விஞ்ஞான முறையில் யூகம் செய்கிறது. இலட்சியத்தில் நம்பிக்கை கொண்டு போராடும் ஊக்கத்தை அளிக்கிறது.

மனித வாழ்க்கையின் வருங்காலத்தை முன்கூட்டியே அறியக்கூடிய நெடிய பார்வை, படைப்பாளிக்கு உண்டு. மார்க்சிம் கார்க்கி இது பற்றி எழுதினார்:

நடப்பிலுள்ளதைச் சித்திரித்தால் மட்டும் போதாது. விரும்பத்தக்க வருங்காலத்தையும், அதனை அடையக்கூடிய வழியையும் எழுத்தாளன் சித்திரிக்க வேண்டும். சமூக நிகழ்ச்சிகளை வகைப்படுத்த வேண்டும். நடப்பில் காணப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இருந்து முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றைப் பொருளாகக் கொண்டு. இலக்கியம் படைப்பதே, படைப்பாளியின் பொறுப்பாகும்.

முதலாளித்துவ நாடுகளில் முரண்பட்ட வர்க்கங்கள் சமூக அரங்கில் செயல்படுகின்றன. இதில் எந்த வர்க்கத்தின் செயல்கள் வருங்காலத்திற்கு முக்கியமானது, எந்த வர்க்கத்தின் செயல்கள் வருங்காலத்திற்கு முக்கியமற்றது என்பதைக் கண்டு படைப்பாளி விளக்கவேண்டும். வளர்ச்சியைத் தடுக்கும் சத்திகளை இனம் காணவேண்டும். வளர்ச்சியை ஊக்குவிக்கும் சக்திகளை இனம் கண்டு ஆதரிக்கவேண்டும்.

யோகநாதன் சிறுகதையொன்றில் மீன் பிடிக்கும் தொழிலாளியின் வர்க்க உணர்ச்சியின் உதயம் சித்திரிக்கப்படுகிறது. புதிதாகத் திருமணமான மறுநாளே அவனை வேலைக்குப் போகச் சொல்லுகிறார் அவனுடைய முதலாளி. இதுவரை முதலாளி சொல் மீறாத தொழிலாளி வேலைக்குப் போகத் தயங்குகிறான். முதலாளி அவனைத் திட்டி, வீட்டைக் காலி செய்யச் சொல்லுகிறார். அவன் மீது அனுதாபங் கொண்ட தொழிலாளி ஒருவனும் ஒருத்தியும் அவனுக்கு முதலாளியை எதிர்த்து நிற்க ஊக்கமளிக்கின்றனர். முதன்முதலில் தொழிலாளி அடிமைத் தனத்தை உதறியெறிகிறான். வேறு தொழி-

32/3