பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

நா. வானமாமலை

நடைமுறை உழைப்பின் காரணமாக உலக வரலாற்றில் ஓர் அருஞ்செயல் புரிந்தான். சோவியத் நாட்டு விஞ்ஞானிகள், எஞ்சினியர்கள், தொழிலாளிகளது சிறந்த பணிகளின் மூலம் உருவான விண்வெளிக்கலத்தை ஒட்டி உலகிலேயே முதன் முதலாகப் புவிக் கவர்ச்சியை மீறி விண்வெளியில் சென்று அசாதாரண சாதனை புரிந்தான். இங்கு ககாரின் மட்டும் அல்ல இலட்சிய வீரன். அவனுடைய விண்கலத்தை உருவாக்கிய அனைவருமே அவனுடைய இலட்சிய ஆர்வத்தில் பங்கு கொண்ட இலட்சிய வீரர்கள்.

பகற்கனவுகளைத் தோற்றுவிக்கிற இலட்சியங்கள் பயனற்றவை. வாழ்க்கையை மேன்மையும் சிறப்பும் உடையதாக மாற்றவல்ல குறிக்கோள்களே பயனுள்ளவை.

இலட்சியங்கள் தினசரி வாழ்க்கையின் மீது ஆதாரப்பட்டிருக்கவேண்டும். ஒரு வர்க்கத்தின் சாதாரணப் பிரச்சினையோடு இணைந்திராத எந்த மிக உயர்ந்த குறிக்கோளும் ஒரு செப்புக் காசின் மதிப்புக்கூடப் பெறுவதில்லை. (லெனின்).

மக்களின் ஆர்வங்களோடு தொடர்பு கொண்டுள்ள குறிக்கோள்களே வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டவை. என்பது தற்காலத்தின் உயர்ந்த சாதனைகளின் வருங்கால வளர்ச்சியைப் பற்றிய கற்பனை. இது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தோடு இணைக்கிற, நிறைவேற்றப்படவேண்டிய கற்பனையான திட்டம்.

இது வளர்ச்சி பெறும்பொழுது மக்களைக் கவருகிறது. கருத்தில் வளரும் குறிக்கோள், சமூகம், அரசியல், ஒழுக்கம், அழகியல் ஆகிய துறைகளைத் தழுவி வளர்ச்சியடைகிறது. உணர்வுமிக்க மக்களின் உள்ளத்தில்தான் இது இருக்கிறது. தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகளின் சிந்தனையிலும் கலைஞர்களது உள்ளத்திலும் இருக்கிற குறிக்கோள் முழுமை பெற்றுத் தத்துவமாகவும் விஞ்ஞானமாகவும் கலைப்படைப்பாகவும் வெளிப்படுகிறது.

முதலில் அகவயமாக இருந்த கற்பனை, வாழ்க்கையில் யதார்த்தமாகிறது.

வாழ்க்கையின் மீது ஆதாரப்படாத கற்பனை பொய்க்கன வாய்ப் பயனின்றி மறைந்துவிடும்.

தாமஸ் மூர், கம்பன் போன்றவர்களின் கற்பனை, உடோபி யாவாகவும் கோசலமாகவும் கலைப்படைப்பாக உருவாகி மக்களைக் கவர்ந்து சிறிதுகாலம் நற்கனவுகளை உண்டாக்கியது. பிறகு யதார்த்த வாழ்க்கையின் தாக்குதலால் செயல்படுத்தப்-